உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம்

61

அருமையின் அமைவதாம். அதனால், "சுந்தரமூர்த்திகளுடன் பரிசனங்களும் பலர் சென்றனர் என்றும் சென்ற இடங்களிலே எல்லாரோடும் நமது நாயனார் நிலத்திலே யாதொரு அமளியையும் விரும்பாது படுத்திருந்தனர் என்றும் சரித்திரத்தாலே தெரிய வருகின்றது” எனச் சுட்டுகிறார் (39). பொது மடத்தில் அடியார்களுடன் அளவளாவித் தங்கியதும், செங்கல்லைத் தலைக்கு வைத்துப் படுத்ததும் சுட்டி அவர்தம் எளிமையை மேலும், மேலும், அடியார்கள் வணங்குவதற்கு முன்னரே தாம் வணங்கினது அவரது தாழ்மை மிக்க உள்ளத்தையும், அடியார்மாட்டு வைத்த பேரன்பையும் விளக்கும் என்றும் கூறுகிறார் (40).

காது

காட்சியுட் கண் முற்றிலும் ஈடுபட்ட காலை ஒன்றினையும் கேளாது. நாவு ஒன்றினையும் சுவைக்காது. மூக்கு ஒன்றினையும் முகராது. தொடுவதை மெய் அறியாது. ஆதலின் கட் புலனில் பிறபுலன்கள் அடங்கி ஒழிந்தன என்பார். “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள" என்றார், என்பது முதலாக அத்திருப் பாட்டுக்குக் கா. சு. தரும் எளிய இனிய விளக்கம் அருமை மிக்கதாம் (43-45).

திருவாரூர் ‘கமலை’ என்றும், திருக்குளம் ‘கமலாலயம்' என்றும் வழங்கப்படும். திருமகள் வழிபாடு செய்ததால் அப் பெயர் பெற்றது என்பது தொன்மக் கதை. அதனை உட் கொண்ட கா. சு., திரு ஆர் ஊர் என்று பிரித்து, திருமகள் பொருந்திய இடம் எனப் பொருள் கொள்கிறார். கமலினி என்பார் பரவையாராகத் திருவாரூரில் திருப் பிறப்படைந்தமையின் பொருத்தத்தையும் புகழ்கிறார் (69). எல்லாராலும் பரவப் படுதலின் பரவையார் என்ற பெயர் அவருக்கு அமைந்தது போலும் என்றும் கூறுகிறார்.

அகத்துறைக் காட்சி பொழிலகத்தே நிகழ்வதாகக் கூறுதல் மரபெனினும் அது பிறவிடங்களிலும் நிகழும் என்பதற்குச் சுந்தரனாரும் பரவையாரும் திருக்கோயிலில் கண்ட காட்சியைக் குறிக்கிறார். இராமனும் சீதையும் வீதியில் இருந்தும் வீட்டின் மேல் இருந்தும் கண்ட காதல் காட்சியை காட்சியை இணைத்துக் காட்டுகிறார் (71).

தலைவனுக்குரிய ஐயம் தலைவிக்கும் நிகழ்தற் பாலது என்பதைப் பரவையார் நினைவில் எழுந்த ஐயத்தைச் சுட்டுகிறார். இருவர் தம் ஐயக் காட்சிகளை விளக்கி இணைத்துக்