உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

இருந்த அவை அந்தணர் பேரவை; பழையனூரில் இருந்த அவை, வேளாளர் பெருமன்றம். எவ்வூரில் எம்மரபினர் மிகுதிப் பட்டாரோ அம்மரபினுட் சிறந்தோரால் அவ்வூரில் நியாய மன்றம் நடைபெற்றிருத்தல் கூடும்.

மூல ஓலை படியோலை என்ற வழக்கமும், ஆவணத்திற்கு மேலெழுத்து இடுதலும், கைச் சாத்து இட்டாரது எழுத்தினை அவரது பிற எழுத்துக்களோடு ஒப்பு நோக்கி உண்மை தெளிதலும் இக்காலத்திற் போலவே அக்காலத்து நியாய மன்றங்களிலும் நிகழ்ந்தன என்று தெரிகின்றது.

வ்வாறு விளக்குகிறார் கா.சு.

வெகுளிகொண்ட சுந்தரர் வழக்கு முடிவதற்கு முன்னரே லையைக் கிழித்தமையால் வெகுளியால் தவறுண்டாம் என்பதை மெய்ப்பிக்கும் கா. சு., “திருவருள் பெறுந் தகுதியுடைய இவர்க்குச் சினம் எழுந்தமை கதிரவன் எழுவதற்கு முன்னுள்ள குமரியிருட்டுப் போல்வதொரு நிலையாம்' என்கிறார்.

கா.சு.

கா.சு.,

வழக்கிட்ட இறைவன் விடை மேல் காட்சி தந்ததை ஆழ்ந்து எண்ணும் கா. சு. “முதற்கண் மானுடச் சட்டை சாத்தி வந்து வழக்கிட்ட இறைவன் பின்னர் விடை மீது தோன்றி அருள் செய்தமையால் சகலர்க்கும் பிரளயகலர்க்கும் அருள் செய்யும் முறைகள் இங்கே கலப்புற்றன. மயக்கம் மிகுந்த முதல் நிலையில் சகலர்க்கருளும் முறையையும், திருவருட்டுறையும் புகுந்து மயக்கந் தீர்ந்து நாயனார் அன்போடு அழைத்தகாலை இரு மலத்தார்க்கு அருளும் முறையையும் றைவன் பயன் படுத்தியதும் காண்க” என்கிறார். (27).

கா.சு.

சுந்தரர்க்கு இறைவனால் முதற்கண் இடப்பட்ட பெயர் வன்தொண்டர் என்பது என்னும் கா. சு. “அருச்சனை பாட்டே யாகும்; சொற்றமிழ் பாடுக” என்னும் இறைமொழியை விளக்கு முகத்தான், பொருள் விளங்காத மொழியிலே படர்க்கை இடமாகவுள்ள மந்திரங்களைச் சொல்லி இறைவனை மலர் தூவிப் போற்றுவதிலும் தேவார திருவாசகப் பாடல்களினால் மலர் தூவுதலே அன்பினை வளர்த்து அருளினை மல்குவிக்க வல்லதாம் என்கிறார்.

சுந்தரர் அழகராகவும், பட்டுடையராகவும், அணி மணி பூண்ட மணக் கோலத்தராகவும் என்றும் திகழ்ந்தவர் எனினும் அவர்தம் உள்ளத்து எளிமை பெரும் பாட்டுக்குரியதாம்.