உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

59

தமிழ்ப் பழங்குடியினராகிய கள்ளர் பிரிவினில் மணமகன் குதிரையில் ஏறியே வருதலும், அதன் முடி ஒன்றனை எடுத்து மணமகட்குத் தாலியெனக் கட்டலும் அண்மைவரை நிகழ்ந்தது. இன்றும் அரிதாக அவ்வினத்தாரின் நடைமுறையில் உள்ளது. திருநாண் பூட்டாமை, குலத்தலைவர் திருமணம் நடத்துதல், இருவினைக்கும் முற்றாக வேதியரை அழைத்துச் சடங்கு நிகழ்த்தாமை என்பவை இன்றும் நடை முறையில் உள்ளவை. ஆதலால் மணமகன் குதிரையேறிவரல் வழக்கு முற்றாக இன்றும் ஒழிந்துவிடவில்லை என்பதைக் கருதலாம்.

மணத்தினை வேள்வி என்று கூறு கூறுவது து ஒரு ஒரு வழக்கு என்கிறார். கா, சு. ‘வேள்’ என்னும் அடிப்படைச் சொல் விரும்பிச் செய்வதற்கெல்லாம் அமைந்தது. விருந்தென்னும் வேள்வி, வேட்டை, வேட்டல், வேள், வேணீர் என்பன எண்ணத்தக்கன.

சுந்தரர் காலத்திலே ஒருவர், தம்மையும் தம் வழி முறையையும் அடிமையாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்ததையும். அந்தணர்க்குள் அவ்வழக்கம் இல்லாமையையும் சுட்டுகிறார் கா. சு. "அந்தணர் அந்தணர்க்கே, அடிமையாவதாகக் கட்டுப்பட்டமையால், குல வரம்பு கடத்தலைப் போல அது குற்றமாகாது' என்று கொண்டனர் போலும் என்கிறார்.

சுந்தரர் அடிமை என்பதற்கு ஆட்சி, காட்சி, ஆவணம் என்னும் மூன்றனுள் ஒன்றை வெண்ணெய் நல்லூர் அவையினர் வேண்டுகின்றனர். அதனைக் கருதும் கா. சு. அக் காலப் பதிவு நிலை முதலியவற்றை வரைகிறார்.

என்று

ஆட்சி, ஆவணம், காட்சி என்னும் மூன்று ஆதரவுகளை வழக்குத் தீர்ப்பதற்குக் கருவியாகக் கொண்டனர் தெரிகிறது. இம் மூன்றிலும் ஆட்சியே முதற்கட் கூறப் பட்ட மையால், அவ் அவ் வழக்கமே தலையாய சான்றாகக் கருதப்பட்டது. ஓலைப் பத்திரம் ஒப்பினவற்றை எழுதிக் கொள்ளப் பெரிதும் பயன்பட்டதாகக் தெரிகின்றது. ஆனால் அரசாங்கத்தார் பத்திரங்களைப் பதிவு செய்யும் (Register) வழக்கம் அக்காலத்திலில்லை.

காட்சி என்பது நிகழ்ந்ததொன்றைக் கண்டவர் பகரும் சான்று. வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஊராரது பேரவையே ஒவ்வொரு ஊரிலும் நியாய மன்றமாக இருந்ததென்று தோன்றுகின்றது. ஒவ்வொரு மரபினருக்கும் தனித்தனி மன்றங்கள் இருந்திருக்கலாம். திருவெண்ணெய் நல்லூரில்