உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

குறிக்கும் பெயர்கள் (11) அருளையும், பெருமையையும் குறிக்கும் பெயர்கள் (6) அரசரியல் குறிக்கும் பெயர்கள் (2), போக வாழ்க்கை குறிக்கும் பெயர்கள் (8) என 39 பெயர்களை ஒழுங் குறுத்திக் கூறுகிறார்.

அப்பரடிகள் வரலாற்றிலே நூலின் இடைப்பகுதியில் பெயராய்வு செய்த கா. சு., சம்பந்தர் வரலாற்றிலே நூலிறுதியிலே ஆய்ந்து நிறுவினார். அஃதவர் பட்டறிவு வளர்ச்சி. அதற்குப் பின்னர் வந்த இச்சுந்தரர் வரலாற்றிலே பெயர்களை வகைப்படுத்திக் காட்டி இறுதியில் நிறைவித்தது ஆய்வு வளர்ச்சிச் சான்றாகும். நூல் நிறைவில் 'பேர்’ நிற்றல் நன்றேயன்றோ!