உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகப் பெருமான்

வரலாறு

திருவாளர் காந்திமதிநாத சுப்பிரமணியனார் (கா.சு).1928 இல் எழுதி, கழகத்தின் வழியாக வெளி வந்த நூல் இஃதாகும். 'மணிவாசகர் புகழ்மாலை' என மாணிக்கவாசகர் புகழ்பாடும் பாடல்கள் 8 கொண்டுள்ள முகப்பினுடன் நூல் விளங்குகின்றது. மச்சபுராணம் முதலிய 7 புராணங்களில் இருந்து ஒவ்வொரு பாட்டும் திருவருட்பாவில் இருந்து ஒரு பாட்டும் கொண்டது

து.

நூல் தோற்றுவாய், குருவருள் பெற்றது, தில்லைக்கு ஏகுதல், புத்தரை வாதில் வென்றது, திருவாசக ஆராய்ச்சி, திருக்கோவையார் ஆராய்ச்சி, திருவாசக அகவல் ஆராய்ச்சி, மணிவாசகரைப் பற்றிய பட்டயத்தின் மூலம் அதன் மொழி பெயர்ப்பு என ஒன்பது பகுதிகளாக இயல்கின்றது.

முதல் நான்கு பகுதிகளும் மணிவாசகர் வரலாறும், பின் மூன்று பகுதிகளும் மணிவாசகர் நூலாய்வும், இறுதியவை வரலாற்றுச் சான்றும் என முப்பொருட் பகுப்பு உடை யது நூல் எனலுமாம். நூல் பக்கங்கள் 121.

கடவுளைக் கண்டவர் இல்லாத நாட்டிலே, ‘கடவுளைக் காணுதல் கூடும், என்ற கொள்கை உண்டாதற்கிடமில்லை; கடவுளைக் கண்டவர் இருந்திருப்பினும், அவர்களைப் பற்றி யறியாத மாந்தர், ‘கடவுள் தோன்றுதல் கூடும்' என்பதை நம்ப மாட்டார் என்று கூறுவதன் வழியே தமிழகம் கடவுளைக் கண்டவர் இருந்த நாடு என்றும், அவ்வாறு கண்டவரை அறிந்த மாந்தர் இருந்த நாடு என்றும் மாணிக்கவாசகப் பெருமான் வரலாற்றின் தோற்றுவாய் வழியே நிலைபெறுத்துகிறார்.

சைவத்திருநெறித் தலைவர்கள் நால்வருள் முற்பட்டவர் மணிவாசகர் என்றும், இறைவன் மனிதப் போர்வை போர்த்துக் குருவாக வந்து ஆட்கொண்டருளப் பெற்றவர் என்றும், அக் கருத்தே மறைமலையடிகள் கருத்தென்றும், அதற்குச் சான்றாகச்