உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

செப்புப் பட்டயம் ஒன்று கிடைத்துளதென்றும் இப்பகுதியிலே குறிப்பிடுகிறார்.

வட

மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் புத்த சமயம் சிறப்பாகத் தமிழ் நாட்டில் நிலை பெறாமை, திருவாசகத்தில் பல்லவ மன்னரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படாமை, திரு வாசகத்தின் பாவமைதி, சொல்லமைதி ஆகியவை, சொற்கலப்பும் விருத்தப்பாக்களும் தேவாரத்தில் காணப்படுதல் போல் திருவாசகத்தில் காணப்படாமை ஆகியவற்றால் மணி வாசகர் நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பதை

6

வலியுறுத்துகிறார்.

மணிவாசகர் வரலாறு பற்றியுரைக்கும் நூல்களைத் தொகுத்துரைக்கும் ஆசிரியர், அறுபத்து மூவருள் அவர் சேராமைக் காரணத்தை ஆராய்கிறார். திருத்தொண்டத் தொகை வல்வினையாற்றி இறையருள் பெற்ற பெரியாரையே தனிப்பட விதந்தோதும். அறுபத்து மூவருள் மணிவாசகர் போல இறைவனே குருவாக வந்து ஆட்கொள்ளப்படாமையின் ஆகம நெறிக்குப் புறனடையாய் அமைந்தவரே நாயன்மாராகத் தொகுக்கப்பட்டனர் என்றும் பொய்யடிமை இல்லாத புலவர் என்பார், மணிவாசகர் என்பாரும் உளர் என்றும் அவர் பிறப்பால் வீரசைவர் என்பதொரு கொள்கை உண்டு என்றும் சில கருதுகோள்களை இத்தோற்றுவாயில் வைத்துள்ளார்.

குருவருள் பெற்றது பற்றிய செய்தி முன்னரும் (7-11) அதன் ஆராய்ச்சி பின்னருமாக (11-47) இரு பகுதியாய் விரிவாக அமைந்துள்ளது.

மாணிக்கவாசகர் இயற்பெயரும், பெற்றோர் பெயரும் விளங்கவில்லை என்றும், முன்னூல்களில் வை காணப் படாமையால், வடமொழி ஆலாகியம் இவர் தந்தையார் பெயரைச் சுந்தரநாதர் என்றும், பெருந்துறைப் புராணம் தந்தை, தாயார் பெயரைச் சம்புபாதாசிரியர், சிவஞானவதி என்றும் புனைந்து கூறப்பட்டனவாதல் வேண்டும் என்கிறார்.

சிவம் விளையும் செந்நெற் பயிரெனத் திருவாதவூரர் தோற்றமுற்றது முதலாகப் புராணம் கூறும் செய்திகளைத் திரட்டித் தரும் ஆசிரியர், இறைவன் அவர் சென்னி மேல் திருவடி சூட்டி ஆட் கொண்டருளிய காலைச் ‘சென்னிப்பத்துப்’ பாடினார் என்றும், இறைவன் மாணிக்கவாசகன் என்னும்