உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம்

69

திருப்பெயர் அளித்தனன் என்றும் அடிகள் கோயில் திருப் பணியில் ஊன்றினர் என்றும் கூறியமைக்கின்றார்.

அடிகளை வடமொழிநூல் ‘ஆதிசைவா' என்று கூறவும் கூறியது கொண்டு, 'வடநூலினை நேரே கற்று அதனைத் தமிழிலே மொழி பெயர்க்காது வடமொழி வாணர் கூறுவதைக் கேட்டு தமிழ் நூலுடையார் தாம் கூறும் கதைகளை எழுதினராதல் வேண்டும்' என்று கருத்துரைக்கிறார் (12).

பிரமராயர் என்ற பட்டம் அடிகள் அமைச்சராய் இருந்த கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வழங்கிற்றென்று கொள்ள இடமில்லை; வரலாறு எழுதப்பட்ட காலத்து வழக்கு நுழைந் திருக்கலாம் என்று தெளிகிறார். (13).

திருவருள் பெறுமுன் மணவாழ்க்கை நடத்தித் திருவருள் பெற்றபின் பேரின்ப வாழ்க்கைத் துணையாகத் தம் தேவியைக் கொண்டிருத்தல் கூடும் என்னும் கருத்தினையும் முன்வைக்கிறார். அதன் சான்றையும் சுட்டுகிறார் (14)

கடவுள் திருவருளை நாடி உலகப் பயன் கருதாது வீடு பேற்றை அவாவிநின்று தம் செயலற்றிருத்தல் முதற்படி;

இறைவனை அடையும் வழி யாதென்று ஆராய்ந்து மேற் சொல்லுதல் இரண்டாம் படி; அகத்தால் முற்றும் உலகத்தையே துறந்து திருவருள் வழி நின்று புறத்தே உலக வாழ்க்கை நடத்துதல் மூன்றாம் படி; அகத்தும் புறத்தும் துறுவு நிலையுற்று ஞானாசிரியன் ஒருவனையே தேடி வருந்தித் திரியும் நிலை நான்காம் படி; இந் நான்காம் படி எய்தியவர் அடிகள் எனக் கடவுள் மாமுனிவர் கூற்றின் வழியே தெளிவாக்குகிறார் கா. சு.

பாண்டிய வேந்தன், வாதவூரடிகளைக் குதிரை வாங்குதற்கு அனுப்பியமை கொண்டு அவர் குதிரைகளின் இலக்கணம் பிறரினும் நன்கறிந்தவர் என்பது புலப்படும் என்று உய்த்தறிந்து கூறுகிறார் (16).

குருவர் கையில் சிவஞானபோதம் இருந்ததென்பதும், அதுகுறித்து அடிகள் வினாவினார் என்பதும், அனைய பிறவும், பிற்காலத்துப் புனைவுரைகள் என்று தள்ளுகின்றார்.

உயிர்களைத் துன்புறுத்தும், பற்று, வினை, மயக்கம், என்னும் மூன்றனுள் பற்றினான் மட்டும் கட்டுண்டவர், பற்றினானும், வினையினானும் கட்டுண்டவர், பற்று, வினை,