உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ் வளம் 14

மயக்கம் மூன்றானும் கட்டுண்டவர் என்னும் மூவகையாருள், முதல் வகுப்பார்க்கு இறைவன் தனது இயல்பை உண்ணின்றுணர்த் துவன் என்றும், இரண்டாம் வகுப்பார்க்கு இறைவன் தெய்வத் திருமேனி கொண்டு ஆட்கொள்வான் என்றும், மூன்றாம் வகுப்பார்க்கு மனித வடிவத்தோடு வந்து மெய்யறிவுச் சுடர் காளுத்துவான் என்றும் சைவ நூல்கள் கூறும் வகையில், அடிகளுக்கு இறைவன் மக்கட்போர்வை போர்த்தெழுந்தருளி திருவடி ஞானம் வழங்கினன் என்று ஆய்ந்துரைக்கின்றார் (19).

சூழ்ச்சியொன்றாற் காணலுறுவார்க்கும், நூலுணர்ச்சியான் மட்டும் தெரியக் கருதுவார்க்கும், உருவ வழிபாட்டு மாத்திரத்தாற் காணலுறுவார்க்கும் யோக நெறியாற் காணலுறுவார்க்கும் பிறர்க்கும் ஒளித்துத் தாழ்வெனும் தன்மையுடையராய்ச் சார்பு, செயல், ஒருமை என்னும் நிலைகளைக் கடந்து, திருவருள் பதியப் பெற்ற மேலோர்க்கே இறைவன் தன் மெய்ந்நிலை உணர்த்தும் என்பதை அடிகள் வாக்கினால் தெளிவிக்கிறார் (19-20).

இறைவன் கனவில் வந்திலன் என்பதையும் நேரில் வந்தனன் என்பதையும் மானுடச் சட்டை தாங்கி வந்தனன் என்பதையும் அடிகள் வாக்குகளைக் கொண்டு நிறுவுகிறார்.

ச்

அரசன் தந்த பணத்தைத் திருப்பணிக்குச் செலவிட்டமை அவன் நலத்திற்குச் செய்த சேம வைப்பே என்றும், “சித்தம் சிவமாகப் பெற்ற அடிகட்கு உலகர் விதியும் விலக்கும் ஒவ்வா” என்றும் அமைதி காட்டுகிறார் (22).

66

அடிகளை ஒறுத்த வேந்தன் வரகுணன் என்று கூறுவது தவறு” என்று வரகுணனைப் பற்றி அறியப்படும் செய்திகளைக் கொண்டு மறுக்கிறார் (37). அடிகள் வாயிலாகவே, அரசனை உய்யக் கொண்டமையால் அடிகளே அவனுக்கு அருட்குருவர் என்கிறார் (47).

திருவண்ணாமலையில் அடிகள் மார்கழித் திங்களில் திருவெம்பாவை பாடினராகலின், ஆவணித் திங்களில் மதுரையில் ருந்து அதற்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து திருவண்ணாமலைக்கு அவர் வந்தனர் என்று கருதலாம் என மதிப்பிடுகிறார் (55).

திருவுந்தியார் இரண்டாம் பாடலில் ‘ஏரம்பர்' என்னும் ஆட்சி உள்ளமையால் அது காஞ்சியில் பாடப்பட்டது என்று கருதுகிறார் (55)