உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம் ஓ

71

பொன்னம்பலம் என்று ஒருகாற் சொன்னால் ஐந்தெழுத்தை இருபத்தோராயிரத்து அறுநூறு தரம் கூறியதை ஒக்கும் என்னும் புராணக் கருத்தை ஒருநாள் முழுதும் விடும் மூச்சு 21,600 ஆதலின், ஒரு நாள் முழுவதும் கூறியதாகும் எனக் கூர்ந்த திறத்தால் விளக்குகின்றார் (65).

அடிகளிடம் வாதிட்டுத் தோற்ற புத்த சமயத்தர் கொடுந் தண்ட னை பெற்றனர் என்று பரஞ்சோதி முனிவரும், கடவுண்மா முனிவரும் கூறுவதை, “அவர்கள் மிகப் பிற்காலத்தவர்கள்; அடிகள் காலத்து மக்கள் மனநிலையை உணராதவர்கள்” என மறுக்கின்றார் (66).

அடிகளது திருவருட் பாடலின் பொருள் உணர்வார்க்குப் பயன், பல்லோரும் ஏத்திப் பணியச் சிவபுரத்துறைதலாம் எனின், அத்தகைய பாடல்களை மொழிந்தமைக்கு அடிகள் இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய பெரும் பயன் எய்துதற் குரியர் என்பது திண்ணம் என வரலாற்றை நிறைவு செய்கின்றார் (74).

திருவாசக ஆராய்ச்சி என்னும் பகுதியில் அடிகள் பாடிய பதிக வரிசையை ஆய்ந்துரைக்கிறார் (76-7). இறைவன் முதல்வன், முனைவன், தலைவன் த என்னும் சிறப்பினனாதலையும், ஆதியும், நடுவும் அந்தமுமாய் ஐந்தொழில் இயற்றுதலையும், எப்பொருளினும் எவ்வுயிரினும் இரண்டறக் கலந்து நின்றும் பொருட்டன்மையால் வேறாதலையும், அன்பர்கட்கு அருளு மாறு அருட்சக்தியால் பல்வேறு உருவு கொள்ளுதலையும், பசு பாசத் தொடக்கற்ற பேரின்ப வடிவனாதலையும் பிறவற்றையும் அடிகள் வாக்குகளால் விரிவாக கூறுகிறார். அடிகள் தாம் உலக இன்பத்தில் மூழ்கிய முன்னை நிலையையும், பரம்பொருளைத் தேடி அலைந்ததையும்,இறைவனோடு இரண்டறக் கலக்க விழைந்த விழைவையும், தம்மைத் தாம் பழித்துறைக்கும் தாழ்மையையும், இறையடியார் பெயர் சுட்டிக் கூறுவதையும், றைவன் திருவுருவச் சிறப்பை அழகாகப் புனைந்துரைக்கும் உரையையும் விரிவாக எடுத்துரைக்கின்றார்.

திருக்கோவையார் முதற் பாடலில் தாமரை, குவளை, குமிழ், கோங்கு, காந்தள் ஆகிய ஐந்து மலர்களைச் சுட்டுதல், ஐந்திணைக்குரியவாகலின் ஐந்திணை இன்பமும் குறிப்பான் உணர்த்தப்பட்டன என வியக்கின்றார்(93). பிற்கால நூல்களில் காணப்படும் உவமைகள் பல, திருக்கோவையாரில் முதற்கண் எடுத்தாளப் பட்டிருத்தலைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.