உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

விரைவுடைய பேய்த்தேராகிய கானல் போலப் பாசக் கூட்டம் நீங்கி யொழிய இறை ஞானமானது பிறவித் துயராகிய வெப்பத்திற்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும். அக்காட்சி சலியாமைப் பொருட்டு, அப்பொருள் பயக்கும் திருவைந்தெழுத்தை விதிப்படி தியானிக்க.

10. முற்றிலும் பாசநீக்கம் பண்ணும் வகையுணர்த்துவதைக் கருதியது. இத்சூத்திரம் திருவருட் பேற்றினை உணர்த்துவது.

உயிர்கள் கட்டுற்ற காலத்திலே, இறைவன் உயிரோடு அத்துவிதமாய்க் கலந்து நின்ற அம்முறையே, உயிர் முதல்வனோடு ஒற்றித்து நின்று தானென வேறு காணப்படுமாறில்லாமல், இறைவன் கட்டளையில் வழுவாது நிற்கவே ஆணவமலம்மாயை என்பவற்றோடு கொடிய வினையும் இல்லையாய் முடியும்.

9.

10.

ஊனக்கண் பாசம் உணராப் பதியை

ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி

உராத்து னத் தேர்த்தெனப் பாசம் ஒருவத்

தண்ணிழலாம் பதிவிதி எண்ணுமஞ் செழுத்தே.

அவனே தானே ஆகிய அந்நெறி

ஏக னாகி இறைபணி நிற்க

மலமாயை தன்னொடு வல்வினை இன்றே.

11.

பரமசிவனால்

குறித்தல் கருதியது.

விளையும்

சிவானந்தானுபவம்

காட்டக் காணும் இயல்புடைய கண்ணுக்கு உருவத்தைக் காட்டித் தானும் காண்கின்ற உயிர் போல, உயிர் பொருள்களை அறியும்படி முதல்வன், அதனோடு இயைந்து நின்று அறிவித்து அறிந்து வருதலால், அவ்வுபகாரத்தை மறவாது கடைப்பிடித் துச் செய்யும் அன்பாலே முதல்வன் திருவடியாகிய சிவானந்த அனுபவத்தை எய்தும்.

12. சீவன்முத்தர் உலக நிலை கூறியது.

சீவன்முத்தன் (உடம்பில் வீடெய்தியவன்) செந்தாமரை மலர் போல விரிந்து விளங்கிய முதல்வனது வலிய திருவடி களை அணைய ஒட்டாது (மறத்தலைச் செய்விக்கும்) மும்மல அழுக்கை ஞான நீராற் கழுவி, மறவா அன்பு செய்யும் அறிஞ ரோடு கலந்து, மலமயக்கம் நீங்க அன்பு மிக்க அவரது திரு