உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம் ஓ

85

விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு

அளந்தறிந் தறியா ஆங்கவை போலத் தாந்தம் உணர்வின் தமியருள்

காந்தங் கண்ட பசாசத் தவையே.

6. உணருரு அசத்தெனின் உணரா தின்மையின் இருதிறன் அல்லது சிவசத் தாமென

இரண்டு வகையின் இசைக்குமன் உலகே.

7. சத்திற்கும் அசத்திற்கும் வேறாகச் சதசத் துண்மை அறிவித்தல் கருதியது.

அசத்தாகிய உலகப் பொருளெல்லாம், சத்தாகிய சிவத்தின் முன் பாழாம். ஆகலின், சத்து அசத்தை அறிதல் செய்யாது. அசத்தாகிய உலகம் அறிவிலதாகலின் ஒன்றையும் அறியும் தன்மையுடையதன்று. சத்தையும் அசத்தையும் அறியும் இரு வகைத் தன்மையுடையதாய்ச் சத்தேயாகவும் அசத்தேயாகவும் இல்லாத சதசத்தாகி உயிர் உளது.

8. ஞானத்தினை உணருமுறை.

உயிர்களது தவமிகுதியால் அவற்றிற்கு உள் நின்று உணர்த்திய முதல்வன் குருவடிவாய் எழுந்தருளி வந்து நீ ஐம்பொறிகளாய் வேடருள் அகப்பட்டு வளர்ந்து நின் பெருந் தன்மையை மறந்தாய் என்று உண்மை அறிவிக்க அறிந்து ஐம்புல வேடரை விட்டு நீங்கி இறைவனோடு அந்நியமாகாத தன்மையில் நிலைபெற்று அவன் திருவடிகளை அணையும் என்றவாறு. 7. யாவையும் சூனியம் சத்தெதிர் ஆகலின் சத்தே அறியாது அசத்தில் தறியாது இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா.

9.

8. ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்

தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு அன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே.

வாசனாமலம் தாக்காது உயிரினைப் புனிதமாக்குவதை உணர்த்துதல் கருதியது.

குறைவான அறிவாகிய பாச ஞானத்தால் அறியப்படாத முதல்வனை அவனது திருவடி ஞானமாகிய கண்ணினால், அறிவின் கண்ணே ஆய்ந்தறிக. ஒருவரும் ஏறிச் செலுத்தாத