உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

4. இதுவும் அது.

இளங்குமரனார் தமிழ் வளம்

14

ஆன்மா அகக்கருவிகளாய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் அவைகளில் ஒன்றல்ல. அரசனுக்கு அமைச்சன் போல அவற்றைத் துணையாகக் கொண்டு உள்ளது ஆன்மா. தன்னோடு எப்போதும் உள்ள ஆணவமலத்தினால் பொருள்களைத் தானே அறியமாட்டா. அவற்றின் துணை கொண்டு அறிந்து ஐந்து வகையான உணர்வெல்லைகளை உடையது ஆன்மா.

3. உளதுஇல தென்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்

4.

உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின் மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.

அந்தக் கரணம் அவற்றின் ஒன்றன்றவை சந்தித்த தான்மா சகசமலத் துணராது அமைச்சர சேய்ப்ப நின்றவஞ் சவத்தைத்தே.

5. சுட்டுநிலையில் இறைவன் உயிர்க்குச் செய்யும் உதவியை உணர்த்துதல் கருதியது.

மேலே கூறிய உயிராலே மெய், வாய், கண், மூக்கு, செவி என்று ஐந்து பொறிகளும் தத்தம் விடயங்களை அளவிட்டு அறிந்தாலும், தம்மையும், தம்மைச் செலுத்தும் உயிரையும் அறியமாட்டா. அப்பொறிகள் போல உயிர்களும், தம்மையும், தமது அறிவிற்கு விளக்கம் தருபவனாகிய தனி முதல்வனது திருவருட் சத்தியையும் அறியமாட்டா. உயிர்கள் முதல்வனாய் அறிதல், காந்தத்தின் முன் வைத்த இரும்பு போல முதல்வன் சந்நிதிமாத்திரையில் நிகழும். ஆதலால் முதல்வன் விகாரப்

பட்டான்.

6.

நிலைப்பொருள் இது, நிலையாத பொருளிது என அறிவித்தல் கருதியது.

இறைவன் அறியப்படும் இயல்பினன் எனின், உலகப் பொருள் போல நிலையிலாப் பொருளாவான். அவன் எவ் வாற்றானும் அறியப்படாதவன் எனின், அவன் சூனியமாவன். ஆதலின் இரண்டு தன்மையுமின்றி உயிரறிவால் அறியப் படாமையும் பதியறிவால் அறியப் படுதலுமாகிய இரண்டு வகையாலும் இறைவன் சித்தாகிய சத்தாய் உள்ளவனெனக் கூறுவர் மெய்யில் நிலைபெற்று உயர்ந்தோர்.