உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

கருத்துப் பொருளும், நூற்பாப் பொருளும் ஒடுங்குதற்குக்

காரணமாயுள்ள

83

முதற்கடவுளையே

இவ்வுலகம் தனது தலைவனாக உடையது.

அவன், அவள், அது என்று பகுக்கப்படும் உலகத் தொகுதி தோன்றுதல், நிலைபெறுதல், ஒடுங்குதல் ஆகிய மூன்று தொழிலுடைமையால் அது, ஒருவன் ஆற்றலால் தோற்றுவிக்கப் பட்டு நிலைபெறுவதேயாம். அதுதான் ஒடுங்குதற்குக் காரண மான கடவுளாலேயே தோன்றுவது. ஆணவமலம் தீர்ந்து ஒடுங்காமையால் அது ஒடுங்கியதோடு நில்லாது மீளவும் உண்டாவது. அதற்கு ஒடுக்கமாய் முடிவைச் செய்யும், அந்தக் கடவுளே ஆதியுமாகின்றான் எனத் தருக்க நூலறிந்தோர் கூறுவர்.

2. மறு பிறவி வரும் வகை உணர்த்துதல் கருதப்பட்டது.

இறைவன் கலப்பினால் உயிர்களேயாயும் தன்னியல்பால் தானேயாயும் உயிர்களுடன் நின்று அறிவித்தலால் உடனாயும் நின்று, கட்டளை என்ற தனது ஞானசக்தியால் இருவினைப் பயனுக்கேற்ப இறத்தல், பிறத்தல்களை உயிர்கள் மேற் கொள்ளும்படி அந்த ஞானசக்தியோடு பிரிவில்லாது நிற்பன.

3.

1. அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்

அந்தம் ஆதி என்மனார் புலவர்.

2. அவையே தானே ஆயிரு வினையிற்

போக்கு வரவு புரிய ஆணையின்

நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.

உயிருண்மையும் விளக்கமும் உணர்த்துதல் கருதியது.

நான் இதுவல்ல, அதுவல்ல என்று கூறுவதொன்று உண்டாகலானும், எனதுடல் என உடலைக் கூறுவதொன்று உண்டாகலானும், ஐம்பொறிகளையும் அவற்றின் நீக்கத்தையும் அறியும் அறிவுடையதொன்று இருத்தலானும், துயின்றபோது உணவு செயல் இல்லாததொன்று இருந்தலானும், ஒன்றை உணரச் செய்யுங்காலை உணர்வதொன்று இருத்தலானும், மாயையால் ஆகிய கருவியாகிய உடம்பினுள் உயிரென்பது உடம்பின் வேறாயுள்ளது.