உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. கால்வாயும் வாய்க்காலும்

“ஆயிரம் காலால் நடந்து வந்தேன்' என்று ஆறு கூறுவதாகக் கூறுவார் ‘கவிமணி' யாம் மாமணி.

பாரத் தொடரி (Goods Train) யைப் போல ஊர்ந்து செல்லும் பூச்சியை, ‘ஆயிரங்கால் பூச்சி' என்று சிறார் உவமை கூறி மகிழ்வர்.

'கால்' என்பது பல பொருள் தரும் சொல். அப்பல பொருளுள் இடப் பொருள் என்பதும் ஒன்று! அதனால், ப் இலக்கணர் கால்' என்பதை இடப்பொருள் உருபெனவும் சுட்டுவர்.

ஆற்றில் இருந்து நீர் பிரியும் இடம் 'கால்' எனப்படும். "மேலக்கால்,' 'தென்கால்,' 'வடகால்' என்பவை 'காலால்' பெயர் பெற்று, ஊர்ப் பெயரும் ஆனவை. 'வெள்ளைக்கால்’ என்பதும் 'கால்' பெயரால் வந்த ஊர்ப் பெயரே.

ஆறு பிரியும் இடம். கால்! அக்கால் எங்குச் சென்று சேரும்? 'வாய்' ஆகிய இடம் சென்று சேரும். அவ்வாய் எவ்வாய்? ‘கண்வாய்' என்பதே அது!

கால், வாய்க்குச் சேரும் நீரோட்டப் பகுதி -காலும் வாயும் இணைந்த பகுதி - ‘கால்வாய்’

பயிர்

வாயில் இருந்து நீர் வெளிப்பட்டுப் பாயும் நிலத்துக்குச் சென்று பாயும் - பகுதி, வாயொடு கால் இணைக்க அமைவதாம் 'வாய்க்கால் என்பதாம்.

கால்வாய், வாய்க்கால் என்பவை முறையே வாய்க்கு நீர் வரும் வழியும், வாயில் இருந்து நீர் வெளியேறும் வழியும் ஆம்!

போக்கு வரவுக்கு இடனாக னாக இருப்பது வாய். அஃது இல்லத்துக்கு ஆம் பொழுது 'இல்வாய்' என இருந்தது. அச் சொல்லமைதி முன் பின் மாறிக் கிடந்து, 'வாயில்' ஆகிவிட்டது! நிலை பெற்றும் போயது! இலக்கணப் போலி என இலக்கணமும் ஏற்றமைந்துவிட்டது!