உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம்

15

'காக்கை பிடித்தல்' என்பதற்கும் காக்கைக்கும் தொடர்பு

உண்டா?

பாவம் ! பழியோரிடம் பாவமோரிடம்!

கால் கை பிடிப்பதே காக்கை பிடித்தலாம்; காக்கைவலி?

கால் கை வலித்தலே காக்கை வலியாம்!

இப்படியெல்லாம் நம்மவர் சிறுமைப் படுத்துவர் என்று தான் காக்கை 'கன்றிக் கருமை'யாகித் தோன்றியதோ? இனியொரு காக்கைச் சுவை! காட்சிச் சுவை!

'காக்காய் கறிசமைத்துக் கருவாடு மென்று தின்பர் சைவர்' என்பது!

நல்ல சைவர் இவர்? ஆம் நல்ல சைவரே!

ஒரு சிறு காயாக இருந்தாலும் முழுமையாகக் கறியாக்கி உண்ணாமல், கால் காயை வெட்டி எடுத்து அதனைச் சமைத்து உண்பராம்? ஏன் கால் காயையும் உண்கிறாராம்? கருவாடிப் போகுமே -உயிர் போகிவிடும் -என்பதால் உண்கிறாராம்; வழக்கிலேயுள்ள இச் செய்தி, கலைவாணரால் திரைச்

செய்தியாகத் திகழ்ந்தது!

நல்லனவெல்லாம் 'கா' கா' என எப்பாலும் எப்போதும் பறையறையும் காக்கை தந்த சொல்வளம் நல்வளம் அல்லவோ!