உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

103

ஒருவர்க்குப் பல திங்களுக்கு ஒருமுறை வருவாய் வரலாம்! 'உழவர் ஊதிய நிலை’ அதுதானே!

இவர்கள் எப்படி வருவாயைச் செலவிடவேண்டும்? கண்வாயில் இருந்து வாய்க்காலுக்குச் செல்லும் நீரொழுக்குப் போலச் செலவு செய்யவேண்டும்?

வரவு மிகையா? குறையா? அது கவலைக்கு உரியதன்று! செலவு, வரவில் குறையா? மிகையா? என்பதே கவலைக்கு உரியது!

குறைந்த வருவாய் எனினும், அதற்கும் குறைந்த அளவில் செலவு செய்தலைத் திட்டப்படுத்திக் கொள்க! நிறைந்த நன்மையாவது இதுவே! இதனைத்தான், வள்ளுவப் பெருந்தகை நயமுறக் கூறுகிறார்.

66

ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை போகாறு அகலாக் கடை

என்பது அது, ஆகாறு (ஆகு, ஆறு) பொருள் வழி; இட்டிது சுருக்கமானது; போகாறு (போகு, ஆறு) பொருள் செலவாகும் வழி; அகலாக் கடை - விரிவடையாத இடத்து!

ஆகாறு போகாறுகளைக் காட்டிப் பொருளியலை நாட்டு கின்றார் வள்ளுவர்!

கால்வாய் வாய்க்கால்களைக் கண்முன் காட்டிட நிலை நாட்டுகின்றது, கண்வாய்!

உழவர், இக்குறிப்பை மறக்கலாமா? பிறர் பிறரும் மறக்கலாமா? காண்பார்க்கு கண்ணிடைப் பொருளியல் நெறிமை புலப்பட வேண்டுமே! அம்மட்டோ?

66

‘ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை

என்னும் வள்ளுவம் மின்னிட வேண்டுமே!