உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. குட்டம்

தாழுநோய்' என்றும் ‘பெருநோய்' என்றும் வழங்கப் பெறுவது குட்ட நோயாகும். ‘அங்கமெலாம் குறைந்து அழகு தொழுநோய்' என்றார் அப்பரடிகள் 6.95:10). 'குட்ட நோய் நரகந் தம்முள் குளிப்பவர் இவர்’ என்றார் திருத்தக்க தேவர்

(சீவக. 253)

ல்

“உடம்பின் குறுக்கு நெடுக்காய் ஓடும் சிரைகளில் புகுந்து நாடி நரம்பு சவ்வு முதலியவைகளைத் தாக்குவதும் அல்லாமல் எலும்பு இரத்தம் ஊன் இவைகளைச் சிதைவுறச் செய்து பிறகு வெளிப்புறத்துத் தோலில் விரைந்து பரவி உடம்பில் பல வகையான தழும்புகளை எழுப்பித் தீராவலியை உண்டாக்கும். இதனால் காது உதடு மூக்கு விரல்கள் முதலியன தடித்து, உடல் மினுமினுத்துத் தோல் கடினமாகிச் சிவந்தும், வெளிர் மஞ்சளாகியும் கொப்புளங்கள் ஏற்பட்டுத் தினவு எரிச்சலுடன் புண்ணாகி ஆறாமல் குழிவிழுந்து கடைசியாக முகம் வேறுபட்டு விரல்களும் குறையும்” எனக் குட்டநோய் பற்றிச் சாம்பசிவம் பிள்ளை அகராதி கூறும்.

“நீர்க்குட்டம், வெண்குட்டம், சொறிகுட்டம்,

கருங்குட்டம், பெருங்குட்டம், செங்குட்டம், விரிகுட்டம்,

எரிகுட்டம், விரற்குறைக்குட்டம், சடைக்குட்டம்,

யானைக்குட்டம், திமிர்குட்டம், விரணக்குட்டம், காய்க்குட்டம், அழிக்குட்டம், கிருமிக்குட்டம், ஆறாக்குட்டம்”

எனத் தமிழ் மருத்துவ நூலோர் குறிப்பிடும் பதினெண் வகைக் குட்டங்களையும் அவ்வகராதியால் அறிந்து கொள்ளலாம்.

குட்டம் என்பதை அகராதிகளும் சரி, பொதுமக்களும் சரி, எழுத்தாளர்களும் சரி ‘குஷ்டம்' என்று வழங்கி வருதல் வெளிப் படை. மிக அரிதாகச் சிலரே 'குட்டம்' எனக் கூறுவதும் எழுதுவதும் வழக்கமாக உள்ளது. குட்டம் என்பது குஷ்டமாக