உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

105

வழங்கப் பெறுகிறதா? குஷ்டம் என்பது தமிழ் மரபுப்படி குட்டமாகக் கொள்ளப்பெறுகிறதா? மூலச் சொல்லாய்வுதான் இதற்கு முடிவு காட்டவல்லது!

ஒரு சொல்லின் வேரும், அதன் மூலமும் தமிழில் காணப் பெறுமாயினும், ஏனைத் திராவிட மொழிகளில் காணப்பெறு மாயினும் அது தமிழ்ச் சொல்லே என்று தெளிதல் வேண்டும். இவற்றுடன்; பழகு தமிழிலேயே அழுத்தமான சான்றுகள் முறையாகக் கிடைப்பின் அதனைத் தமிழ்ச் சொல்லென ஏற்றுப் போற்ற அறிவுடையார் சிறிதும் தயங்கார். மயங்கித் தாம் முன்னர் வழங்கியிருப்பினும், உண்மை உணரும் பொழுதில் அறிவுடையார் உவந்து வரவேற்றுப் போற்றுவர் என்பதிலும் ஐயமில்லையாம். இக் குறிப்புடன், குட்டம் என்னும் சொல்லை நோக்குவோம்.

குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன்இங் கில்லை' என்று புலவர் ஒருவர் பாடினார். 'குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும்' என்பதும் 'குட்டக் குட்டக் குனிபவனும் மடையன்; குனியக் குனியக் குட்டுபவனும் யன்' என்பதும் 'குட்டின குட்டும் குண்டிற் பாய்ந்த தண்ணீரும் வருமா?' என்பதும் பிறவும் பழ மொழிகள்.

மை

குட்டுங் டுங் கையைக் கருதுவோம்; வளமாக வளர்ந்து வளமாய் அமைந்த விரல்களும் எப்படிக் கூனிக் குறுகிப் போகின்றன? குட்டுங் கைவடிவு குட்டத்தின் இயல்பைக் குறித்துக் காட்டவில்லையா? கையைக் குறுக்கித் தாக்குவது குட்டு; கையைக் காலைக் குறுக்கு வைக்கும் நோய் குட்டம். குட்டுங்கையும் குட்டக் கையும் சொன் மூலத்தால் ஒன்றுபடும் ம் இது. ‘கட்டுக் குட்டான ஆள்' என்பதில் ‘குட்டு’ என்பது குறுமைப் பொருள் நேரே வழங்குதல் தெளிவு.

இட

குட்டுங்கையும், குட்டக்கையும் ‘குட்டை’யாகிப்போகின்றன அதனால் சிறுமைப் பொருள் குட்டைக்கு ஏற்பட்டது. 'கட்டை குட்டை' என்பது மரபு மொழி. குட்டைப்பலா, ‘குறும்பலா’ எனப்பெறும். குறும்பலாவின் பெருமை குற்றாலத் தேவாரத்தில் விளங்குகிறது. 'குட்டையும் குழியுமோ’ ‘குளங் குட்டையுமோ நாம் கேளாதன அல்ல ‘கைக்குட்டை’ என்னும் புதுச் சொல்லும் நாகரிக உலகம் படைத்துக் கொண்டதே. குட்டையனும் குட்டைச்சியும் ஊரூர்க்கு இல்லாமலா போய்விட்டனர்! பட்டப் பெயர்களால் பரிமளிப்பவர்கள் அவர்கள் அல்லரோ! வளையக் காட்சிக் (Circus) குட்டையர் வரவை எதிர்பாரார் எவர்?