உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம்

15

தோண்டுவார் ‘குத்துக்கம்பி'யாம் கடப்பாறையைப் பயன் படுத்துவர்.

கிணற்றில் நீர் இறைப்பதற்குக் கருவிகள் சிலவேண்டும். அவற்றுள் ‘கீழ் குத்துக்கால் பத்தற்கல்லில் உள்ள துளைகளில் ஊன்றப்படும். மேற்குத்துக்கால் பட்டடைச் சட்டத்தில் உள்ள துளைகளில் ஊன்றப்படும். கூனை அல்லது சால் சுவரில் தட்டாமல் வருவதற்குரிய உள்வளைவை ஆக்கி உதவுவவை வ்விருவகைக் குத்துக்கால்களே! குத்துக் கால்கள் போல் ஊன்றி உட்காருதலே குத்துக் காலில் உட்காருதல்' என்பதாம். தேங்காய் நெற்றை உரிப்பதற்குரிய கருவி ‘குத்துத் தரம்’ என்பது. ஒரு கட்டையில் ஊன்றி இறுக்கி வைக்கப் பட்ட கூர்நுனைக் கம்பியே குத்தி உரிப்பதற்குப் பயன்படுவது.

யானைப் பாகர்கள் கையில் ‘குத்துக்கோல்' வைத்திருப்பர். கன்னம் போடுதற்கெனவும் குத்துக்கோல் உண்டு. பாம்பு பிடிப்பவர் 'குத்துத்தடி' கொண்டிருப்பர். போர்க் கருவியாகவும் குத்துத்தடி. பயன்பட்டதுண்டு. குத்துக் கருவி இல்லாமலே கைவிரல்களை மடக்கிக் ‘குத்துச் சண்டை செய்வதும் உண்டு. அச்சண்டை செய்பவர் 'குத்திப் பயில்வான்' எனப்பட்டனர். ஓதுவது ஒழியாத ஓதுவார் போலக் குத்துப்பயிற்சியை விடாப் பயிற்சியர் 'குத்திப் பயில்வான்' எனப்பட்டனர். அவர்கள் ‘குஸ்திப் பைல்வான்' என்னும் பெயரால் இக்கால் உலாவரு கின்றனர்.

மூக்கில் குத்தி அணியப்பெறும் 'அணிகலம் மூக்குத்தி (மூக்குக் குத்தி)! 'காது குத்து' வைத்துப் பலபேர் காது குத்துதல் சில குடிவழிகளில் பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது. காதணி அணியாவிட்டாலும், 'குத்துவாய்' காது குத்தைக் காட்டிக் கொண்டிருத்தல் ஆடவர் பலரிடத்தும் இன்றும் காணலாகும்.

'புலிகுத்தி' யானைகுத்தி' என்பவை பழங்காலத்தில் வீரர்கள் பெற்ற பராட்டுகள். பட்ட கல்லில் புலிகுத்திச் செய்தியுண்டு! பட்ட கல் நட்ட கல்லாய் ‘வீர வழிபாடு' ஏற்பட்டமை தொல்பழவழக்கு.

மீனைக் குத்தி எடுக்கும் பறவை மீன்குத்தி (மீன் கொத்தி). மரத்தைக் குத்தி மகிழும் பறவை மரங்குத்தி (மரங்கொத்தி). குத்துதலால் குத்திப் பெயர் பெற்ற பறவைகள் இவை. 'கொக் கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த இடத்து’ என்றார் திருவள்ளுவர்.