உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. குத்து விளக்கு

தமிழர் வாழ்வில் குத்து விளக்குக்குத் தனிச் சிறப்பாம் இடம் உண்டு. ஒளியேற்றும் பயன்பொருளாக இருப்பதுடன் மங்கலப் பொருளாகவும், கலைப் பொருளாகவும், தெய்வப் பொருளாகவும் திகழ்கின்றது குத்துவிளக்கு!

அழைப்பிதழில் குத்துவிளக்குப்படம் போட்டுவிட்டால் திருமணவிழா என்றோ, புதுமனை புகுவிழா என்றோ எவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் பழகிப்போய்விட்டது.

66

“குடும்பம் ஒரு குத்து விளக்கு” என்பது நம்மவர் பழமொழி. "குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி”

என்பது ‘பாவை' பாடிய 'பாவைப்பாட்டு

(19).

குத்து விளக்கு என்பதிலுள்ள குத்துக்குப் பொருளென்ன? குத்துக்கும் விளக்குக்கும் உள்ள நேரடித் தொடர்பு விளக்கமாக வில்லையே! குத்தைப் பற்றி ஆய்ந்தே முடிவுக்கு வர வேண்டும்!

குத்துதலால் பெயர்பெற்றது ‘குத்தூசி'. முள் குத்தினால் முள்ளால் குத்தி அதை எடுப்பது காட்டுப்புறத்தில் இந்நாளிலும் காணும் நிகழ்வு!

“வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்

கற்றாழை முள்ளுக் கொத்தோடு குத்திற்றாம்!”

என்பது பெருகவழங்கும் பழமொழி.

மேல்மண் கீழ்மண் கலக்குமாறு உழும் கலப்பையில் குத்தி' உண்டு. அதற்குக் 'கலப்பைக் குத்தி' என்பது பெயர். குத்தி உழுதலால் பெற்ற பெயர் அது, களையைக் குத்தி எடுப்பதற்குக் கூர்ப்புடைய குச்சியையோ, கம்பியையோ பயன்படுத்துவர். அதற்குக் ‘களைக்குத்தி’ என்பது பெயர். மண்ணை ஆழமாகத்