உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம்

15

ஒரு பகுதி, குண்டக்கல் குண்டாழஞ்சேரி என்னும் பெயர் களையும் கடமலைக் குண்டு, கூத்தியார் குண்டு, வெற்றிலை (வத்தல)க் குண்டு, குண்டத்தூர் முதலாக வழங்கும் பெயர் களையும் எண்ணுக. குண்டெல்லாம் மருதநில ஊர்களாகவும், பள்ளத் தாக்கினவாகவும் இருத்தல் பெயரீட்டுச் சிறப்பை நன்கு விளக்குவதாம்.

குண்டு கட்டாகத் தூக்குதல் என்பது காலையும் கையையும் மடக்கித் திரட்டித் தூக்குதல்; சிறைப்படுத்துதல் போல்வது. குண்டக்க மண்டக்கப் படுத்தல் என்பது பொது மக்கள் வழக்கு. கால்மாறித் தலைமாறி உருண்டு புரண்டு கிடக்கும் படுக்கை நிலை அது.

வம்பப்பரத்தை என்னும் தொடருக்கு 'இடங்கழி காமத்த ளாகிய குண்டக்கணிகை” என்று பொருள் எழுதுகிறார் அடி யார்க்கு நல்லார் (சிலப். (10:219). ஓடியாடும் சிறுவர்களைக் 'குண்டை என வழங்குவதையும் சிலப்பதிகாரம் குறிக்கிறது

(2:88).

குண்டன் என்பதற்கு, இவற்றையெல்லாம் திரட்டி உருட்டிய பொருள் போல் அடிமை, அடித்தொண்டு செய்பவன், முறை கேடாம் வழியில் பிறந்தவன், முறைகேடன், சிறு குணத்தன், முரடன், கொடியன் கொடுமைக்கு அஞ்சாதவன், வன்பன், தடியன் எனப் பல பொருள்களை அகராதிகள் வழங்கு கின்றன.

குண்டர் தடைச் சட்டம்' என ஒரு சட்டம் உண்மை நாடறிந்த செய்தி தானே!