உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

109

வளைந்து சுருளும் சுருட்டைப் பாம்புக்குக் குண்ட லி என்பது பெயர்; ஆல வட்டமெனத் தோகை விரித்தாடும் மயிலுக்கும் குண்டலிப் பெயர் உண்டு. உருண்டு திரண்ட குதிரை, காளை ஆகியவற்றைக் குண்டை எனப்படுதல் இலக்கிய வழக்கு. உருண்டு திரண்ட குறும் பூதம் குண்டைப் பதம் எனப்படும். குண்டோதரன் புகழ், திருவிளையாடல் கண்டது. குண்டம் - பெருந்தாழி, ஆழ்குழி. உதரம் - வயிறு; பெருங்குழி எப்படிப்போட்டபொருள்களையெல்லாம் வாங்கிக் கொள்ளுமோ அப்படி வாங்கிக் கொள்ளும் பெருவயிறன்! இது பொருந்தப் புனைந்த புனைவுப் பெயர்.

குண்டலம் அண்மைக் காலம் வரை வழக்கில் இருந்த காதணி. குண்டல கேசி என்பாள் சுருட்டைக் கூந்தலள் அல்லது சுரிகுழலி! அவள் பெயர் அவளைப் பற்றிய நூற்பெயராகித் தமிழன்னையின் குண்டலமெனவும் புனைந்துரைக்கப்படுவ தாயிற்று. 'காதொளிரும் குண்டலமும் கைக்குவளை யாபதியும்" என்பது. அப்பாட்டின் தொடக்கம் குண்டுக் கடுக்கன், அல்லது கடுக்கன் குண்டு சிறுவர் காதணியாக இன்றுமுண்டு! 'குண்டுக் கட்டு; குறுந்தாட்டு" என்பது இலக்கண மேற்கோள் கட்டு கண்ணையுடையது; தாட்டு தாளை (காலை) உடையது; உருண்டைக் கண்ணையும் குட்டைக் காலையும் உடையதைக் குறிப்பது இத்தொடர். குண்டுகட்பாலி யாதனார் என்பார் சங்கப் புலவருள் ஒருவர்.

·

குண்டு என்பது ஆழம் என்றும், குழி என்றும், நன்செய் நிலம் என்றும் பொருள் தரும். மேலைக்குண்டு, கீழைக் குண்டு என வயல் நிலம் சுட்டப்படுவதும், 'குண்டும் குழியுமாகக் கிடக்கிறது' எனக் கூறப்படுவதும் அறியத் தக்கன. குண் பாய்தல் என்பது பூக்குழியில் இறங்குதல்.

L

-

ம்

கதிரோன் பெயராலும் திங்களின் பெயராலும் விளங்கிய நீர்த்துறைகள் முறையே சூரிய குண்டம், சோம குண்டம் என வழங்கப்பட்டமை சிலம்பால் அறிய வரும் செய்தி. 'குண்டு நீர் இலஞ்சி', 'குண்டுக்கண் அகழி' 'குண்டு நீர்' ‘குண்டகழ்’, குண்டுக் கயம்' என்பன சங்கத்தார் ஆட்சிகள். எருமைமேல் இருக்கும் சிறுவன் ஒருவனைக் குண்டுக்கல் மேல் குந்தியிருக்கும் குரங்குக் காட்சியாக்குகிறது சங்கப் பாட்டொன்று.

குண்டையூர் கிழார் புகழைத் திருத் தொண்டர் புராணம் விரித்துரைக்கிறது. குண்டூர்க் கூற்றம் பண்டைச் சேரநாட்டின்