உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. குண்டு

குர், குல், குள், குண் முதலாம் வேர்களின் வழியாகப் பிறக்கும் சொற்கள் வட்டம், வளையம், உருட்சி, திரட்சி முதலிய பொருள்களைத் தரும்.

அக்

கோலிக் குண்டையும் துமுக்கிக் குண்டையும் (துமுக்கி துப்பாக்கி) பார்த்த அளவான் குண்டின் அமைப்புப் புலப்படுமே. குண்டு மல்லிகை' குண்டின் வடிவ மணமும் பரப்புவதன்றோ! குண்டு எறிதல் என்னும் விளையாட்டுக் கருவி நாம் அறியாததா? அணுக்குண்டுக் காடுமை சொல்ல வேண்டுமா? குண்டுமாரி பொழியவும் துடிக்கும் வெறியர் உண்டென்ப உலகம் காணாததா? குண்டின் வழியாகக் குண்டடித்தல் விளையாட்டு மட்டுமா வெளிப்படுகிறது! குண்டடித்தல் என்பதற்குத் தோல்விப் பொருளும் தந்து விட்டதே! கொடுமைக்குக் களமாகக் குண்டு போடும் தீமை, வரவேற்புக்கும் மகிழ்வுக்கும் கூட உலகளாவிய சான்றாக விளங்குகின்றதே! குண்டு குண்டாக எழுதுதல் பாராட்டுக்குரியதன்றோ! குண்டுச் சட்டி, குண்டுச் செம்பு (உருண்டைச் செம்பு; உருளி என்பதும் அது) குண்டா, குண்டான், குண்டாஞ்சட்டி, குண்டு வட்டில் (கும்பா) என்பன வழக்கில் உள்ள உண்கல வகைகள்.

குண்டாவின் பருமை 'அண்டா குண்டா' என்பதால் புலப்படும் "குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டல்" என்பது பழமொழி. குண்டிகை என்பது கமண்டலம்; குண்டி, குண்டிக்காய் என்பன உறுப்புகள். குண்டூசியும் குண்டாணியும் வழக்கில் உள்ள செய்பொருள்கள்.

குண்டெழுத்தாணி பண்டு வழக்கில் இருந்த எழுத் தாணிகளுள் ஒன்று; அதன் தலையில் ‘குண்டு' அமைப்பு இருக்கும் குண்டு அரமும் உண்டு. அதன் பெயர் குண்டரம். கட்டட வேலைக்குப் பயன்படுவது நூல்குண்டு, குண்டுமணி என்பது உருண்டு திரண்டமணி; குன்றிமணியைக் குண்டுமணி, குண்டுமுத்து என்பது பிழைவழக்கு.