உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

107

ஒட்டின என்ப என்று கூறிக், குட்டம் அளவடியில் குறுகிய அடி என்பதைக் குறித்தார்.

‘உன் குட்டை உடைக்கிறேன் பார்' என்பதில் குட்டு என்பது கரவான செய்திளையக் குறிக்கிறது. குறுகி ஆழ்ந்த நீர் நிலை இருள்படிந்து புலப்படாவாறு கிடப்பதன் வழியே, கரவுப் பொருள் குறித்ததாதல் வேண்டும்.

குள் என்னும் வேரில் இருந்து பிறந்த சொற்களுள் ஒன்று குட்டம். அது குறுமைப் பொருளது. அப் பொருள் மாறா வகையிலேயே ஆசிரியர் தொல்காப்பியர் காலம்முதல் வழங்கி வருகின்றது. அவருக்கு முன்னரும் வழங்கியது என்பதை அவர் மறவாமல் (1372) என்பர் (1374) என்மனார் புலவர் எனக் குறிப்பிடுகிறார். இத்தகு தொல் வழக்கும், பொருள் பொருத்திய நெறிமுறை வழக்கும், சான்றுகளும் பல்கியிருத்தலின் ‘குட்டம்’ என்னும் தமிழ்ச் சொல்லே ‘குஷ்டம்' என ஆய்வின்றி எழுதப் பெறுகிறது. எனக் கொள்க.

வடமொழி பயிலச் சென்ற ஒருவன் வடமொழி 'ஷ்’ தமிழில் 'ட்' ஆகும் எனத் தெரிந்த அளவில், வடமொழி பயின்றதாகத் திரும்பினானாம். ஆட்டுக் குட்டி ஒன்று வேட்டியைத் தின்னக் கண்டானாம். தன் மொழிப் புலமையைக் காட்டுவானாய், ஆஷ்டுக் குஷ்டி வேஷ்டியை திஷ்ட்றது ஓஷ்டு ஓஷ்டு' என்றானாம். இவ்வாறு என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்த தவற்றின் விளைவே 'குஷ்டம்' என்று நகைக்கவே தோன்றுகிறது! அதே பொழுதில் நம்மவர் செய்கை நலிவுறுத்தக் கூடியது என்பதைக் கூறாமல் விடுவதும் முறையில்லை என்றே தோன்றுகிறது.