உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

123

சலக் கால் புரைக்கு இன்னொரு பெயர் ‘அங்கணம்’ என்பது. அங்கணக்குழி என்பதும் அதுவே, அகம்+கண்+அம் அங்கணம் எனப்பட்டதென்க.

“அங்கணத்துள் உக்க அமிழ்தைக்' கூறும் திருக்குறள்.

“ஊரங்கண நீரை” உரைக்கும் நாலடியார்.

அங்கணம் ‘சலதாரை” எனவும் வழங்கும். நீர் ஒழுகுமிடமே சலதாரை' என்க. நீர் பள்ளம் நோக்கி நீண்டு செல்வது. ஆதலால், அது ‘தார்’ என்றும், ‘தாரை' என்றும் வழங்கப்படும். ‘தாரை வார்த்தல்' என்பது நீர் வார்த்தல் தானே!

ஓடை ஆறு முதலியவற்றில் ஓடும் நீர், இறுதியில் கடலில் கூடுதல் இயற்கை. ‘சலம்’ கூடும் இடத்திற்கு - கடலுக்குச் ‘சலதி’ என்பது ஒரு பெயர்.

66

ரு

தமிழெனும் அளப்பருஞ் சலதி'

என்பார் கம்பர்.

(தாடகை 38)

பல கிண்ணங்களில் பல்வேறு அளவுகளில் நீர் விட்டு ஒலிக்கும் இசைக்கருவி ‘சலதரங்கம்’ எனப்படுவதும், கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்று ‘அம்போ தரங்கம்' எனப் படுவதும் எண்ணத் தக்கன.

கடல் நீர் அலைதல் இடையீடு இல்லாதது. “அலை ஓய்வது எப்பொழுது? தலை முழுகுவதும் எப்பொழுது?” என்னும் பழமொழியே அலையின் இடையீடற்ற அலைவைத் தெரிவிக்கும். அவ்வலைபோல அலைபாயும் உள்ளமும் ‘சலம்’ எனப்படும். அவ்வுள்ள முடையான் சலவன்’ என்றும் அவ்வுள்ள முடையாள் ‘சலதி’ என்றும் கூறப்படுவர்.

“சலம்புணர் கொள்கைச் சலதி”

66

என்றார் இளங்கோவடிகளார். 'சலம் என்பது வஞ்சகம் என்னும் பொருளையும், ‘சலதி' என்பது வஞ்சகி என்னும் பொருளையும் தருவனவாம்.

‘சலவர்’ என்பது கடலோடிகளையும், முத்துக் குளிப்பவர் களையும் குறிக்கும் ‘சலங்குக்காரர்' என்பவரும் முத்துக் குளிப்பவரே. 'சலாபம்' என்பதும் முத்துக் குளித்தலையே குறிக்கும். நீராடுவாரைச் ‘சலங்குடைவர்’ என்னும் பரிபாடல் (10 90) ‘சலகை’ என்பது தோணியையும், ‘சலஞ் சலம்' என்பது