உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம்

15

வலம்புரிச் சங்கையும் (சீவக. 184) 'சலம்புகன்று' என்பது மாறுபட்டுரைத்தலையும் (மதுரைக். 112) குறித்தல் அறியத்

L

தக்கன.

நீரில் தோய்த்து வெளுக்கும் தொழில் ‘சலவை’ எனப் படுவதும், வெளுக்கப்பட்ட துணி ‘சலவைத் துணி' எனப் படுவதும், புத்தம் புதுப் பணத்தாள் 'சலவைத்தாள், எனப் படுவதும், சலவைத்தூள், சலவைக்கட்டி எனச் சவர்க்கார வகைகள் வழங்கப்படுவதும் நீர் ததும்பி வழிதலும் ஓயாது பேசுதலும் 'சலம்புதல்' எனப்படுவதும் வழக்கில் உள்ளமை அறிந்தால். ‘சலம்' என்னும் பொருட் பெருக்கம் நன்கு விளங்கும். ஒரு சொல்லில், வேற்றெழுத்து ஒன்றை அமைத்து எழுதி விட்டால் மட்டும் வேற்றுச்சொல் ஆகிவிடாது என்பதும், ஒரு வேரடியில் வந்த பலசொற்கள் கிடைக்குமாயின் அச்சொல்லின் மூலம் அம்மொழிக் குரியதே என்பதும், குறிப்பாக ஒலிக்குறிப்பு வழிவந்த சொல் ஒன்றற்கு ஒன்று வேறுபட்ட இரு மொழி களிலும் கூட இடம் பெறக் கூடுமென்றும் அறிதல் வேண்டும்.

நீர், புனல் முதலிய சொற்கள் பெரு வழக்கில் இருந்தமையால் 'சலம்' என்பது அருகிக் காணப்படுவது கொண்டும், 'ஜலம்' என்னும் சொல்லில் இருந்து வந்தது என்பார் கருத்துக் கொண்டும் அடிப்படைக் கரணியம் தெளிவாக அமைந்துள்ள சொல்லை வேற்றுச் சொல்லென விலக்க வேண்டுவதில்லை எனத் தெளிக.

6

பெட்டியும், பெட்டியில் உள்ள பொருளும் நம்முடையவை யாய் இருக்க, எவரோ ஒருவர் பெட்டி மேல் வைத்த பொட்டு ஒன்றால் மட்டும் அவர் பெட்டியும் அவர் பொருளும் ஆகிவிடும்

எனலாமா?