உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. சவளி

பெருநகரங்களில் எல்லாம் வண்ண வண்ண எழுத்துகளில் ஜவுளிக்' கடைகள் காணப்பெறுகின்றன. உள்ளே இருக்கும் வண்ணத் துணிகளை யெல்லாம் வெளிப் படுத்திக் காட்டுவது போல், பட்டொளி செய்யும் பலவண்ண மின் விளக்குகள் இலங்குகின்றன. ஆனால், 'ஜவுளி' என்பதோ, பெயர்ப் பலகையில் மொழிக் கொலைக்கு முன்னோடியாய் இருக்கின்றது.

வணிகப் பெருமக்கள் உள்ளம் வண்டமிழ்ப் பக்கம் சாரவில்லையே என்ற வருத்தத்தால் பாவேந்தர்.

'தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை' என்றார். 'உரிமம்' பெறுதற்குக் கட்டாயமாகத் தமிழிலும் விளம்பரப் பலகை இருக்கவேண்டும் என்று, அரசு ஆணை பிறப்பித்தபின், வேண்டா வெறுப்பாய் ஓரஞ் சாரங்களில் ஒட்டுக்குடித்தனம் போல் வைக்கப் பெற்ற தமிழ் விளம்பரப் பலகையிலேயாவது பிழையில்லாத் தமிழ் இருக்கச் செய்ய, எண்ணம் வரக் கூடாதா?

ஆங்கிலத்திலே பலகை எழுத வேண்டுமானால் அதில் தெளிவுடையவர்களிடம் கேட்டு எழுதுகின்றனர். பிழை ஏற் பட்டுவிடுமானால் நாணுகின்றனர்! ஆனால் தமிழைக் கெடுப்பதற்கு மட்டும் மொத்தக் குத்தகை எடுத்தவர்கள் போல் தாமும் அறியாமல் அறிந்தவரிடமும் கேளாமல் தவறாமல் பிழை செய்கின்றனர்! தமிழ்த்தாய் பெற்ற பிள்ளைகளுக்கு அவளை இழிவு செய்வதற்கு உரிமை இல்லையா என்ன?

பாலாடையோ நூலாடையோ என்று ஐயுறுமாறு ஆடை நெய்தார்களாம்! புகைபோலவும் நுரைபோலவும் பாம்பின் உரி போலவும் ஆடை இருந்ததாம்! மூங்கிலின் உள்ளே உள்ள வெண்படலம் போலவும் ஆடை இருந்ததாம்! அத்தகைய நாகரிகம் வளர்ந்த நாட்டிலே, அவற்றை விற்கும் கடைக்கு கு ஒரு பெயர் இல்லாமலா போயிற்று? மடிமடியாக அடுக்கி வைத்து நறுமணம் ஊட்டப் பெற்ற கடைகள் நிரம்பிய வீதியே மதுரையில் இருந்ததாமே!