உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் 15

“நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்

பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து

நறுமடி செறிந்த அறுவை வீதி' என்று கூறுகிறாரே

இளங்கோவடிகள் இவ்வறுவை வீதி, துணிக்கடைகளே இருந்த பெருந் தெருத்தானே! அறுவைக் கடை துணிக்கடை புடவைக் கடை என்னும் பெயர்களைத் தாம் தம் கடைகளுக்கு வைக்க வில்லை! பிழையில்லாத் தமிழிலாவது பெயரிடவேண்டாவா?

ஜவுளிக்’ கடையினர், இப்பெயரை விரும்பி விரும்பி வைப்பதன் ‘மயக்கம்' ஒரு போலி மயக்கம்! ஒரு போலி மயக்கம்! ‘ஜவுளி' என்பது ‘வடசொல்' எனக் கொண்ட மயக்கம் அது. சவளி என்பது, தூய தமிழ்ச் சொல்லாகும்.

சவட்டுதல் என்பது பழந்தமிழ்ச் சொல். அழித்தல், துன் புறுத்தல், வருத்தல், சிதைத்தல், அறைதல், வாட்டுதல் முதலிய பொருள்களில் அது வரும். பல்கால் மெல்லுதலும் சவட்டுதல் ஆகும்; பல்கால் மிதித்தலும் அவ்வாறு சவட்டுதலே ஆகும். ‘மன்பதை சவட்டுங் கூற்ற முன்ப"

66

என்று பதிற்றுப் பத்தும்

66

(84)

வம்பவடுகர் பைந்தலை சவட்டி

என்று அகமும்(375)

66

'அறைக்கல் இறுவரைமேல் பரம்பு சவட்டி

என்று கார்நாற்பதும் (17)

பஞ்சாய்க் கோரைபல்லிற் சவட்டி”

என்று பெரும்பாணும் கூறுகின்றன.

"மழை சவட்டிவிட்டது' என்றும், 'நோய் ஊரையே வளைத்துச் சவட்டி விட்டது' என்றும், 'கதிரைச் சவள மிதிக்க வேண்டும்' என்றும், 'வெற்றிலையை ஓயாமல் மென்று, சவக்களித்து விட்டது' என்றும் பெரிதும் வழக்கத்தில் உள்ளன. சோர்ந்தவன், மெலிந்தவன், மழுங்கியவன் ஆகியவனைச் ‘சவங்கல்’ என்றும், 'சவண்டபயல்' என்றும் பழிப்பதும் வழக்கே. சவளை (சவலை)யை அறியார் எவர்? ‘சவலை வெண்பா' என ஒரு பாவகை இலக்கணத்தில் இடம் பெற்று விட்டதே!

6