உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

128

இளங்குமரனார் தமிழ்வளம் 15

பெற்றதும், சவட்டிச் சவட்டிப் பணி செய்யப் பெற்று உண் டாயதும் ஆகிய ஒன்றைப் பொருள் பொருந்தச் ‘சவளி' என்று முந்தையோர் பெயரிட்டனர். அச் சவளிப் பெயரைச் ‘சவுளி' யாக்கி, அதன் பின்னர் ‘ஜவுளி' யாக்கிப் பண்டமாற்று வேலை செய்யப் பழகிப்போன பெருமக்கள். எழுத்துமாற்று வேலையைத் தொடர்ந்து நோக்கிய இடத்தெல்லாம் நீக்கமறச் செய்து வருகின்றனர். தமிழ் உணர்வுடைய - தெளிவுடைய சிலர் ‘சவளிக் கடை' எனத் திருத்தி வாடிக்கையாக்கிவிட்டால், அதனைப் பார்த்தேனும் ஒருவர் ஒருவராய் உண்மை உணர்ந்து எங்கும் ‘சவளிக்கடை’களாய்க் காண வாய்க்கும்.

எப்படிச்

துணி வேண்டியது இல்லை!

சவட்டப்படுகிறது என்று விளக்க

'பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த பாவியேன்”

66

"யான்படும் பாடு பஞ்சுதான் படுமோ?"

என்பன பட்டறிவால் சொல்லிய பருவரல் மொழிகள்.

பஞ்சு படும்பாடு படாப்பாடுதானே! மணையில் இட்டுக் கொட்டை பிரித்தெடுத்த பஞ்சு வில்லால் புடைக்கப்பட்டு மட்டையால் உருட்டப்பட்டு, நூலாய் இழைக்கப்பட்டு, நூலைப் பாவாய் இழுக்கப்பட்டு, பசையூட்டப்பட்டு, மொத்தும் அடியும் தரப்பட்டு, மிதிபட்டு, அடிபட்டு நெய்யப் பட்டுப், பின்னும் பின்னும் அழுக்குப் போக அறைபட்டு நைபட்டு - எத்தனை ‘பட்டுப் பட்டாய்க்; கிழிபட்டுப் போகின்றது! சவட்டப் பெற வில்லையா, எத்துணையோ வகைகளில், நிலைகளில்? அதனைச் 'சவளி' என்பது சரி தானே!