உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. சுடர்

சுடர், சுடரோன் என்பன கதிரோனைக் குறிக்கும். அது தோன்றும் போது செந்நிறத்தோடு விளங்குவதால் செஞ்சுடர், செங்கதிர், செஞ்ஞாயிறு செய்யோன் எனப் பட்டன; அதன் வெப்பத்தால் வெஞ்சுடர், வெய்யோன் எனப்பட்டன; வெண்ணிறத்தால் வெண்சுடர் வெண்கதிர் எனப்பட்டன. வ்வாறே கதிர், ஆழி, பருதி, பரிதி முதலாம் பெயர்களும் வெவ்வேறு காரணங்களால் அதற்கு அமைந்தன.

சுடரின் நீங்காத் தன்மை சுடுதலும், சுடர்தலுமாம், தீ சுடும்; தீ, சுடரவும் செய்யும். அதனால் ‘தீச்சுடர்’ என்பது பெயர் ஆயிற்று. இறந்தோரை எரிக்கும் அல்லது சுடும் இடம் சுடுகாடு; சுடலை என்பதும் அது. 'சுடலைக்கான்' என்பது சிலம்பு. "இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ” என்பது புறநானூறு. இடுதலால் அமைந்த பெயர் இடுகாடு! சுடுதலால் அமைந்த பெயர் சுடுகாடு!

இந்நாள் உலகம் மின்னுலகம்; எதிலும் மின்; எங்கும் மின். அம்மின்னாற்றல் நீரில் இருந்து வருவது, கரியில் இருந்து வருவது எனப்பல திறத்தன. எவ்வகையில் வரினும் சுடர் விடுவன. நீரில் இருந்து ஆம் தண்ணீரில் இருந்து வந்தாலும் சுடர்விடும். அது, சுடுதல் உடையதே; சூடு உடையதே.

6

சுடுதல் இல்லாமல் சுடர் இல்லை! திங்கள் முதலாம் கோள்கள் சுடர்கின்றனவே அவை சுடுவதில்லையே! என்னும் னாவும் கிளரும்! கோள் என்னும் பெயரீடே இவ்வினவத்திற்கு விடை தருகின்றதே! தன்னொளி உடைய தன்று கோள்; பிறி தொன்றினிடம் இருந்து கொண்ட ஒளியுடையது அது. கொண்டதால். கொள்வதால் பெற்ற பெயரே கோள். எரியும் தீ கண்ணாடியில் தெரியும்போது அது சுடுமா? சுடரே தெரியும். க்காட்சியை எண்ணுக.

-

மின் குமிழ்விளக்கா? குழைவிளக்கா? குழையாவி விளக்கா? சுடாதிருக்கிறதா? சுடவே செய்கின்றது; சுடரும் அது சுடு கின்றது. சூடு பிறக்கிறது; சுடுபடுகிறது; சுடர் விடுகிறது. இஃது