உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம் 15

இயற்கையியல்; அல்லது இயற்கை நியதி. இவ் விளக்கங்களை யெல்லாம் இரண்டே சொற்களால் இணைத்துச் சொல்லி விடுகிறார் முதற்பாவலராம் திருவள்ளுவர். அது, “சுடச்சுடரும் என்பது.

முழுக்குறளும் இதோ:

“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

وو

துன்பம் வாட்ட வாட்ட, வருத்த- அதனைத் தாங்கிக் கடனாற்ற வல்லார்க்கு அவ்வாட்டுதலும் வருத்துதலும் என்ன செய்யும்? சுடச்சுடச் சுடர்பெருகும் பொன்போல் ஒளியைத் தரும்; புகழைத் தரும்; ஆற்றலைத் தரும்; பட்டுப் பட்டுப் பட்டொளி செய்யத்தரும்!

உலக வரலாற்றை ஒரு மேலோட்டப் பார்வை பார்த்தால் புரியுமே! சுடர்ந்த பெருமக்களெல்லாரும் சுடப் பட்டனரா- வருத்தப்பட்டனரா - இலரா? ஒரு காந்தியடிகளை எடுத்துக் கொண்டாலே உண்மை புரிந்துவிடுமே; உலகப் புகழ்வாய்ந்த இலிங்கனார், மார்க்கசார், இலெனினார் இன்னோர் பட்ட பாடுகள் இவ்வளவா? அவ்வளவா?

-

கலில்கிப்பரான் என்பார் கூறினார், கோதுமை மணியை அடித்து - நொறுக்கி - அரைத்து - ஆட்டி - பிசைந்து - சுட்டு வாட்டி வதக்கியதால் அல்லவா அதற்கு அச்சுவை உண்டாயிற்று; பக்குவம் உண்டாயிற்று! இல்லாக்கால் அது உணவாம் சிறப்புறுமா?

தங்கம் படும்பாட்டைக் காணவேண்டுமா? நாடு கடந்து நாடு, கடல் கடந்து கடல் வரை - காண வேண்டுவதில்லை. தங்க வயலுக்குச் சென்று கண்டால் போதும்!

-

எவ்வளவு ஆழமாகக் குடைந்து, பாறையை உடைத்து அத்தங்கப் பாறையைத் தவிடு பொடியாக்கி, அதனை அரைத்துக் கூழாக்கி, கூழில் இருந்து தங்கவடிவைப் பிரித்து, அவ்வடிவைத் திரட்டிக் கட்டியாக்கி முத்திரையிட்ட அளவில் முடிகின்றதா?

தங்கத்தில் செம்பைச் சேர்க்க உருக்க வேண்டாவா? உருக்கிச் சேர்த்த சேர்மானத்தை நூலாக இழுத்து இழுத்து ஆக்குவதால் தானே அணிகலத்திற்கு ‘இழை' என்பது பெயர்,