உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

131

நூலுக்கும் இழை! நூல் போலும் தங்கக் கம்பியால் செய்த அணிக்கும் இழை! அதனை அணிபவளுக்கும் இழை! ஆம்; ஆயிழை, சேயிழை, ஒள்ளிழை, ஒளியிழை, மாணிழை இன்னன.

'பொன்' பொலிவு! பொன், பொலம்! பொன், பொற்பு; பொலிவு, பொலம், பொற்பு என்பனவெல்லாம் அழகு! சுடர்!

சுடல் தீயால் மட்டுமா, வாயால் சுடல் இல்லையா? மனத்தால் சுடல் இல்லையா? கண்ணால் சுடல் இல்லையா? இன்னும் இன்னும் எத்தனை சுடல்கள் வாழ்வில்! சுடலுக்கு சருகு எரியும்; மரம் எரியும்! அறிவுடைய மாந்தனும் எரியலாமா? சுடலைச் சுடரேற்ற வந்த வாய்ப்பாகக் கொள்பவன் உலகுக்கு ஒரு சுடராகத் திகழ்கின்றாள்.

தமிழ்ச் சொல் தரும் வாழ்வியல் செய்தி ஈது!