உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

133

நீரின்மை, நிழலின்மை, எரிபரவுதல், ஓரறிவுயிரும் உய்யாமை என்பனவாம் அவலங்களும் புலவர்களால் பாடு புகழ் பெற்றன. பற்றி எரியும் சுரமே எனினும் புலமைப் பாடல் பெற்ற அளவில், அவண் பயில்வார்க்குத் தண்ணிதாய் அமைந்து விடுவதை இலக்கியக் கலைஞர். நன்கனம் அறிவர்.

“சுடர் சுட்ட சுரம்’ என்கிறது புறம் (136). 'அழலன்ன வெம்மை' என்கிறது கலி. ‘நிழலுறு விழந்த வேனிற்’ சுரத்தை விளக்குகின்றது மதுரைக்காஞ்சி (313-4). நினைத்தாலும் சொன்னாலும் குறித்தாலும் நடுக்கம் உண்டாம் என்பதைச் 'சுட்டினும் பனிக்கும் சுரம்' என்று சுட்டி அமைகின்றது மலைபடுகடாம் (398). இம்மலைபடுகடாத்தின் குறிப்பை. வாங்கிக்கொண்ட கம்பர், 'நினையும் நெஞ்சமும் சுடுவதோர் நெடுஞ்சுரம்' (வனம்புகு. 38) என்பதுடன், ‘எரிசுடர்க் கடவுளும் கருதின் வேம்’ (தாடகை. 5) என்றும் கூறினார்.

இனிச் செயங்கொண்டாரோ, தாம் புனைந்துரைக்கும் பாலையின் ஒரோ ஒரு மணலை எடுத்து அதனைக் கடலில் போட்டிருந்தால் இராமன் கடலில் அணைகட்ட வேண்டியதே இருந்திராது; கடல் நீர் முழுவதையும் அவ்வொரு மண உறிஞ்சி வற்ற வைத்திருக்கும் என்று புனைந்தார்.

6

லே

சுரம் என்னும் சொல் வெப்பத்தைக் குறிப்பது எப்படி? அதை அறிந்தால்தானே, காய்ச்சலை அச்சொல் குறிக்குமா என்பதை அறிந்து கொள்ள முடியும்!

‘சுள்' என்று வெயில் அடிப்பதை எவரே அறியார்? வெயிலடிப்பு மட்டுமா ‘சுள்’ என்று அடிக்கிறது! வளாறு, தடி முதலியவற்றால் அடிப்பதும் ‘சுள்’ என்றும், ‘சுளீர்' என்றும், சுள்ளாப்பாக' என்றும் சொல்லப்பெறுவதாயிற்றே தினவு எடுத்தோ, உடல் எரிவுண்டோ, செந்தட்டி முதலியவை பட்டோ எரியுண்டானால் ‘சுள்ளுச் சுள்ளு' என்று எரிகின்றது என்று கூறுவதை இன்றும் நாட்டுப் புறங்களில் கேட்கக் கூடுமே!

வெயில் உறைத்தல்போல உறைக்கும் மிளகாய்க்கும், மிளகு ஆகியவை கலந்த பொருளுக்கும் ‘சுள்ளாப்பு' என்னும் பெயர் வழக்கில் உண்டு. மதுக்குடியர் வெறிக்குத் துணை யுறுத்தும் துணைப்பொருள் அல்லது கறிப்புப் பொருளுக்குச் ‘சுள்ளாப்பு' என்னும் பெயருண்மை அகர முதலிகளிலும் இடம் பெற்றதேயாம். அம்மட்டோ? மதுவெறி சுள்ளென்று ஏறுவதாகக் குடிவேட்கையர் கூறிக் குளிர்கின்றனரல்லரோ!