உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. சுவடி - சோடி

இரண்டு என்பதைக் குறிக்க இரட்டு, இரட்டை, இணை, துணை, பிணை முதலிய இனிய தமிழ்ச்சொற்கள் இலக்கிய வழக்கு உலகியல் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளிலும் பயில வழங்குகின்றன. இவற்றொடு ‘சோடி' என்னுமொரு சொல்லும் பெருக வழங்குகின்றது. இதனை, 'ஜோடி' என்று எழுதாமல் 'சோடி' என்று எழுதினால் 'வடமொழி' வெறுப்பர்' என்று சொல்வாரும் உளர். அச் சொல்லின் உண்மைப் பிறப்பு, உறுதிப் பட்டால் அன்றித் தமிழரும் ஏற்றுக்கொள்ளார். ஏனெனில்,

அவர்களுள் பலரும் 'ஜோடி' யைத்தானே 'ஜோடி’த்து மகிழ்கிறார்கள்!

பழங்காலத்தில் எழுது பொருளாக ஓலை இருந்ததென்பது வெளிப்படை. ஓலையொடு 'ஏடு' என்பதும் அதற்கொரு பெயர். புல்வகை உறுப்புகளைச் சொல்ல வந்த ஆசிரியர் தொல் காப்பியனார்.

“தோடே மடலே ஓலை என்றா

ஏடே இதழே பாளை என்றா

ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்

புல்லொடும் வருமெனச் சொல்லினர் புலவர்'

என்று அவர்க்கு முந்தைப் புலவர் வழங்கிய மரபினைக் குறிப் பிடுகிறார்.

ஏட்டில் எழுதுவார் தம் விருப்புக்கு ஏற்ற அளவில் நெடிய ஓலையில் ஓர் ஒழுங்குற முறித்தோ, நறுக்கியோ, கிள்ளியோ ஏடு எடுப்பர்.ஆகலின் எடுப்பர். ஆகலின் ஏடு, 'முறி' என்றும், 'நறுக்கு' என்றும், ‘கிள்ளாக்கு' என்றும் பெயர் பெற்றது. ‘ஓர் ஏட்டிலேயே ஒருவர் எடுத்துக்கொண்ட நூல் முற்றுப் பெறுவதில்லை. ஆதலால், பல ஏடுகளை ஓரளவில் எடுத்துத் தொகுக்க வேண்டியதாயிற்று. ஓர் ஏட்டுடன் ஒப்பிட்டு ஓரளவில் எடுப்பதைச் ‘சுவடி சேர்த்தல்’ என்பது வழக்கு ஒன்றோடு ஒன்றை, ஒப்பான அளவாக்கி