உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம் – 15

வறுமையைச் சுருக்கி என்பது தேர்ந்த தெளிவால், நேர்ந்தளித்த கொடையேயாகும்.

இனிச் சுருக்குதல் கணக்கையும், சுருக்கி எழுதும் மொழிப் பயிற்சியையும், சுருங்கச் சொல்லும் மொழியழகையும் கற்றோர் எவரும் அறிவர். சுருக்குப் பையில் பணம் போட்டு இடையில் கட்டிக் கொள்ளுதல் முந்தையர் வழக்கு. சுருக்குப் போட்டுச் சாதலும் சாகடித்தலும் உலகெங்கும் வழங்கும் பொது வழக்கே.

6

சுர் என்பதனுடன் ஐகார ஈறு சேர்தலால் ‘சுரை’யாகும். சுரையாவது துளை என்னும் பொருள் உடையது. அத் துளையும் புறத்துறையன்று; உட்டுளையாம். உட்டுளையுடைய கொடி களைக் குறித்த சுரைப் பெயர், ஒருவகைத் தனிக் கொடிக்கு வழங்குவது பொதுச் சிறப்புப் பெயராம். ‘மா’ என்பது விலங்கு என்னும் பொதுப் பெயர்க்குரியது. ஆயினும் யானைக்குப் பொதுச் சிறப்புப் பெயராய் வழங்குவது போன்றது இது.

புறத்தே மூடி உள்ளே துளையுடைய ஒன்று உள்வெதுப்ப முடைமை தெளிவு. பொந்து, துளை, வளை, பொத்தல், பத்தல் என்பனவெல்லாம் சுரைப்பொருள் சார்ந்த சொற்களே. இவை யெல்லாம் உள்வெதுப்பமுடையவை என்பது கருதுக. ‘சுரங்கம்’ என்னும் சொல்லையும் கருதுக.

சுரை என்பது உள் வெதுப்பத்தின்மூலங் கொண்டு பிறந்த சொல்லாயினும், துளை என்னும் பொதுப்பொருளில் வழங்குவ தாயிற்று. அதனால் காதணி, மூக்கணி, காலணி, தோளணி, கையணி முதலியவற்றின் பூட்டுவாய்ப் பொருத்துகளுக்குச் சுரை என்னும் பெயர் உண்டாயிற்று. சுரை இருந்தால், அதனைப் பூட்டி வைத்தற்கு ஆணி வேண்டுமே! அது ‘சுரையாணி' என்னும் பெயர் பெற்றது. திருகாணி, ஓடாணி, பூட்டாணி, பொதுக்காணி என்பவை சுரையாணி வகைகளாம்.

-

-

சுர் என்பதில் இருந்து நாம் குறித்த இச் சொற்களும், குறித்துக் காட்டாத இன்னும் பல சொற்களும் பகுதி பகுதியாய்த் தொகுதி தொகுதியாய் இருந்தும், அடிக்கரணியம் திட்டத் தெளிவாகத் தெரிந்திருந்தும் சுரச் சொல்லை வட சொல்லாய் வன்படியாய்க் - கையாள்வது நெஞ்சறிந்து செய்யும் வஞ்சமேயாம்! தமிழ்ப் பற்றாளரேனும் விழித்தால் அன்றி, இச் சூழ்ச்சிகள் ஒரு நாளும் ஒழியா!