உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

137

சுருட்டல், அல் மங்கலப் (அமங்கலப்) பொருளில் மட்டும் நின்றுவிடவில்லை வெற்றிலையையும் ஓலையையும் சுருள் என்று பெயர் சொல்ல வைத்தது. திருமண அழைப்புக்குச் சுருள்வைத்து அழைத்தலும், திருமணப் பரிசு வழங்குதற்குச் சுருள் வைத்தலும் வழக்கே. சுருள் என்பது சுருட்டி வைத்த வெற்றிலையாகலின், அவ் வெற்றிலையை வைத்து அழைத்தலும் அவ்வெற்றிலையொடு பணம் வைத்துத் தருதலும் ‘சுருள் என்னும் பெயர் பெற்றன. சுருள் வைத்து அழைத்துவிட்டால் பகை மறந்து உரிமையால் ஒன்றுபடுதல் வேண்டும் என்பது நம்மவர் கொள்கை.

சுருள் வழியே பிறந்த கருணை என்னும் சொல்லுக்கும் ஓலைச் சுருள், வெற்றிலைச் சுருள் என்னும் பொருள்களும் உண்டு. இவற்றுடன் சுருள் வாளையும் சுருணை என்பது குறிக்கும். யானைத் தோட்டி வளைவுடையதாகலின் அதனையும் சுருணை என்பர்.

சுருட்டி என்பது ஓர் அராகம் (இராகம்) சுழலும் இசை யமைதியால் பெற்ற பெயர் அது. சுருட்டி என்னும் பொது அராகத்தில் செஞ்சுருட்டி என்பது ஒரு சிறப்பு அராகம். கூத் தரங்கில் பயன்படுத்தப்பெறும் திரைக்குச் ‘சுருட்டி' என்பது ஒரு பெயர். வேட்டியைச் சுருட்டிக் கட்டிக்கொண்டால் விரைந்து நடக்கலாம் என்பதை நடையர் நன்கு அறிவர். சுருட்டிக் கட்டிய வழக்கே, முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டை ஆகியவற்றுக் கெல்லாம் முன்னோடி! உலக முழுவதும் பண்டு வழங்கிய அரசர் உடைகளை ஆய்ந்தால் இது தெளிவாகும்.

சுருட்டி மடக்கவும், விரிக்கவும் தக்க வகையில் அமைந்த சிவிறிக்குச் (விசிறிக்குச்) சுருட்டி என்பதும் பெயர். சுருங்கி என்பது ஒரு செடி; தொட்டாற் சுருங்கி என்பதும், தொட்டாற் சிணுங்கி, தொட்டால் வாடி என்பனவும் அதன் விளக்கப் பெயர்கள்.

ஆமை, 'சுருக்கி' என்னும் பெயரால் குறிக்கப்பெறும். அச்சம் நேரும் பொழுதில் கால்களையும் தலையையும் சுருக்கிக் கொள்வதால் சுருக்கிப் பெயர் பெற்றது அது. அறுகீரையாம் அறைக்கீரை, அறுத்தறுத்துச் சுருக்கமுறுவதால் அதனையும் சுருக்கி என்பர்.

வயிற்றையும் சுருக்கி, வாயையும் சுருக்கி, வரிமை வனப்புகளையும் சுருக்கி, அருமை பெருமைகளையும் சுருக்கும்