உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

141

ஒப்பினைப் பொருளாம் சுவடியில் இருந்து, சுவடித்தல், சுவடிப்பு, சுவடணை என்னும் தொழிற்பெயர்கள் பிறந்தன. தேர், பல்லக்கு, அரங்கம், ஆட்டக்களம், மன்றம், மாளிகை முதலியன அழகுறுத்தப் பெறும்போது, இப்பாலும் அப்பாலும் ஒப்பு நோக்கி, இணை இணையாய்ச் செய்தலுடைமையால் அவ் வழக்குறுத்தும் கலைச் செயல் இப் பெயர்களைப் பெற்றது. வையே பின்னர்ச் சோடித்தல், சோடிப்பு, சோடணை என்றாயிற்று. இவற்றையும் வடமொழித் தாக்கர் விடுவரா? ஜோடித்தல் ஜோடிப்பு, ஜோடணையாக்கி மகிழ்ந்தனர்.

ஒப்பிணைப் பொருளால் வளர்ந்த ‘சுவடு' இரு பதிவாம் தடங்களைக் குறித்ததில் இருந்து வளர்ந்தது. நடந்தும் ஓடியும் அழுந்தித் தடம் பட்டுப்போன வழியையும், பெருவழியையும் குறிக்கலாயிற்று.

'தேரின் சுவடு நோக்குவர்”

என்று குறிக்கும் கம்பர்.

(அயோ. தைல. 82)

“மண்ணின் மேலவன் தேர்சென்ற சுவடெலாம் மாய்ந்து

விண்ணின் ஓங்கியது”

என்று முடித்தார்.

(ஆரண். சடா 165)

மண்ணின் தடத்தை விடுத்து விண்ணின் தடத்துக்கும் எழும்பினார் ஆளுடைய அரசர்.

66

'அண்டங் கடந்த சுவடும் உண்டோ

அனலங்கை ஏந்திய ஆடலுண்டோ"

என்பது அவர் வாக்கு (தேவா. 6:97:1). இவண் ‘சுவடு' அடை யாளப் பொருட்டது.

“சுவடு' தன் பொருளில் மேலும் வளர்ந்தது; நீர் ஒழுகும் தடம், புண், தழும்பு இவற்றையும் குறிப்பதாயிற்று. யா ானையின் மதம்பாய் தடம் 'மதம் பாய் சுவடு' என்றும் 'யானைச் சுவடு' என்றும் வழங்கலாயிற்று. குருதி கொட்டிய தடத்தைச் ‘செம்புனற் சுவடு நோக்கி இது நெறி' என்று சுட்டுகிறார். கம்பர் (உயுத். மகரக். 29) ஏனைய புண்ணும் தழும்பும் வெளிப்படை.

அழுந்திய தடத்தில் இருந்து சுவடு, 'அழுந்திய மரபு' சுட்டும் சொல்லாகவும் கொங்கு வேளிரால் கொண்டாடப் பெறுவதாயிற்று.