உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் 15

“சொல்லினன் வினவும் சுவடுதனக் கின்மையின்”

என்றார் அவர் (பெருங் உஞ். 24:79). இங்குச் சுவடு ‘மரபு’ அல்லது அடிப்படை வழக்கினைக் குறிக்கிறது. வழித் தடத்தில் இருந்து வாழ்வுத் தடத்துக்கு வந்த வழி து.

சுவடி, சுவடு என்னும் தனித் தமிழ்ச் சொற்களின் வழிவந்த சோடி, சோடு சோடித்தல், சோடிப்பு, சோடணை என்னுஞ் சொற்களை, இனியேனும், ஜோடி, ஜோடு, ஜோடித்தல், ஜோடிப்பு, ஜோடணை என வேற்றெழுத்தால் எழுதும் இழிவினைத் தமிழர் ஒழிப்பாராக! எழுத்து ஏமாற்றம் என்றும் நிலைக்காது என்றும், என்றேனும் உண்மை ஆய்வால் வெளிப் பட்டே தீரும் என்றும், அறிஞர்கள் ஆய்ந்து தெளிவுறு

வார்களாக!