உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. சொல்

‘சொல்' என்பது பலபொருள் ஒரு சொல். அதற்குரிய பல பொருள்களுள் 'நெல்' என்பதும் ஒன்றாம்.

நெல்லில் பால் பிடியாப் ‘பதர்’ அல்லது ‘பதடியை’ எவரும் நெல் என்னார்; பால்பிடித்து மணிதிரளாத ‘அரைக் காயை' நெல் என்னார்; மணி திரண்டும் கறுத்துச் சிறுத்த ‘கருக்காயை' ‘நெல்' என்னார்! மணி திரண்டதையே நெல் என்பார்! அந்நெல்லே சொல்லின் பொருளை உவமை வகையால் விளக்க வல்லதாம். பொருளற்றது சொல்லன்றாம். 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது தொல்காப்பியம்.

சொல் (நெல்) சூல், பசும் பாம்பாய்த் தோன்றுதலையும், அது மணி பிடிக்குமுன் தகவிலாச் செல்வர்போல் தலை நிமிர்ந்து நிற்றலையும், மணி முதிர்ந்த பின்னே கல்விதேர் மாந்தர் போல் தலை தாழ்ந்து வளைதலையும் உவமையால் சுட்டினார் திருத்தக்க தேவர்.

பயனிலாச் சொல்லைச் சொல்வானையும், அதனைக் கேட்பானையும் அதனை நன்றென நயந்து பாராட்டுவானையும் ஒருங்கே 'பதடி' ‘பதடி' எனச் எனச் சுட்டினார் பொய்யாமொழியார். பயனற்ற நாளைப், “பதடி வைகல்” என்ற சான்றோர் பெயரே, "பதடி வைகலார்’ ஆயது!

L

பயனில சொல்லாமை சுட்டிய வள்ளுவரே, சொல்வன்மை கூறியது சொற்பயன் கருதியதேயாம். ஆதலால் ‘சொல்’ என்பது மணிபோன்றது என்பதும், உள்ளீடு உடையது என்பதும், விளங்கும். சொல்லையும் நெல்லையும் ஒப்பக்குறிக்கும், ‘சொல்’ என்பதாலே, முன்னோர்சொல்லிய பொருளும் விளக்கமும் இவையாம்!

சொல்லாகிய நெல்மணியால் உணவுக்குச் ‘சொன்றி' என்பது பெயர். ‘சோறு' என்பதும் சொல் என்பதன் வழியாக வந்த பெயரே. நெல்லால் ஆக்கப் பட்டதையே குறித்த 'சோறு'