உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம்

15

என்னும் சிறப்புப் பெயர், பின்னர் எத்தவசத்தால் ஆக்கிய உணவையும் பொதுவாகக் குறிக்கும் சொல்லாக விரிந்தது. அவ்வளவிலும் நில்லாமல், கள்ளிச் சோறு, கற்றாழஞ்சோறு என்றும் விரிந்தது! “சோற்றுக் கற்றாழை' என்னும் பெயரையும் வழங்கியது! சொல் வழி வந்த சோற்றின் ஆட்சிகள் இவை. சொல்லுதல் வகைகளைக் குறிக்க, ஏறத்தாழ நாற்பது சொற்கள் தமிழில் உள என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் பாவாணர் (பண்டைத் தமிழர் பண்பாடும் நாகரிகமும் பக் : 27-8)

சொல்லின் ஆட்சி எப்படியெல்லாம் திகழ்கின்றது! “அவரைப் பார்த்தேன்; வாய்திறந்து ஒரு சொல்கூடச் சொல்லவில்லை; அவ்வளவு செருக்கு என்று பழிசொல்வது இல்லையா? இதனால், பண்பாட்டின் சின்னம் சொல் என்பது புலப்படும்.

"நீங்கள் ஒரு சொல் சொன்னால் போதும்; கட்டாயம் நடந்துவிடும்” என்பதில் சொல்வாக்கின் ‘செல்வாக்கு’ வெளிப் படுகின்றதே!

ஒரு சொல் சொல்லி வைக்கவும்’ என்பதில் ‘சொல்’ கண்டிப்புப் பொருளாகின்றதே! எச்சரிக்கை அன்றோ இது! 'ஒரு சொல்லுக்குச் சொன்னேன்' என்பதில் சொல் 'சும்மா' 'வாளா' என்னும் பொருளிலேயல்லவோ விளங்குகின்றது! "பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே பல்லுடைபடுவதும் சொல்லாலே” என்பதில் பெருமை சிறுமைகளுக்கு மூலம் சொல்லே, என்பது தெளிவாகின்றதே!

'சொற்றுணை' மிக உயர்ந்த துணையாம்! தன்னந் தனியே காட்டுவழி போகின்றவனுக்குச் சொற்றுணைபோல எந்தத் துணையும் உதவுவதில்லையே! அவன் பாடிச் சொல்லும் சொல்லே, அவனுக்குத் துணையாவது அருமை அல்லவோ!

'சொற்றுணை' என்பது பேச்சுத் துணைதானே, அது தானே, நாத்துணை' 'வாய்த்துணை”, என்பனவும்! சொற்கோ, சொல்லின் வேந்தர், நாவுக்கரசர், வாக்கின் வேந்தர் என்றெலாம் சொல்லப்படும் அப்பரடிகள், இறைவனைச் 'சொற்றுணை வேதியனாக’ அல்லவோ கண்டார்! அருணகிரியார்க்குச் சந்தச் சொல் சொட்டச் சொட்டவந்ததால் அல்லவோ, 'வாக்கிற்கு அருணகிரி’ ஆனார்.

ஒருத்திக்குப் புகுந்த வீட்டில் ஒரு பேச்சுத்துணை கட்டாயம் வேண்டும். அவள் தன்னை ஒத்த அல்லது இளைய அகவை