உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

145

உடன்

யினளாகவும் வேண்டும்; அக்குடும்பத்தின் உறுப்பாகவும் வேண்டும். இவ்வெல்லாம் அமைந்தவள் தன் கொழுநன் உ பிறந்த தங்கை என்பது எவ்வளவு பொருத்தம்! அவளுக்கு ஒரு பெயர் ‘நாத்துணையாள்' என்பதே! இது, இந்நாளில் ‘நாத்துனாள்’ வழங்குகின்றது. ளங்கோவடிகளார் இதனை,

என்று

'நாத்தூண் நங்கை' என்பர்.

உள்ளங் கலந்து உரையாடும் துணை உண்டு; உற்றுழி உதவி உவகை யூட்டும் துணையும் உண்டு. அத்துணைகள் முறையே ‘உசாத்துணை’, ‘அசாத்துணை' எனப்படும். இவை பழமையான சொல்லாட்சிகள்.

நூலுக்கு 'அழகுகள்' இவையெனப் பத்துக் கூறுவர்; நூலுக்குக் குறை’யெனவும் பத்துக் கூறுவர். முன்னை அழகுகளுள் தலையாயது ‘சுருங்கச் சொல்லல்'; பின்னைக் குறைகளுள் முதன்மையானது ‘கூறியது கூறல்'. 'நூலழகே சொல்லழகு' என்பது குறிப்பாம்.

L பாட்டியல் நூல்களிலே ‘ஆனந்தக் குற்றம்' என ஒன்று சொல்லப்படும். ஆனந்தக் குற்றங்களுள் 'சொல்லானந்தம்’ என்பது சொற்குற்றமேயாம்.

மட்டு, தேறல், ஊறல், குடி, கள், மது இப்படி எத்தனை பெயர்கள் இருந்தாலும், தண்ணீர் வெள்ளைக் குதிரை என எத்தனை மாற்றுப் பெயர்கள் இருந்தாலும் கட்குடியர் வழக்கமாக இலக்கண நூல்களில் சொல்லப்படுவது ‘சொல் விளம்பி' என்பதாம். குடியர்கள் ஏன், மயக்கும் கள்ளைச் 'சொல்விளம்பி' என்று தங்களுக்குள் சொல்லிக் கொள்ள வேண்டும்?

-

குடித்தவன் தன் வாயில் வந்ததை எல்லாம் உளறி விடுவான் அல்லனோ! மறைக்க வேண்டியது - சொல்லக் ாதது என அடக்கிக் கொள்ள மாட்டாமல் அவிழ்த்து விட்டுவிடுவான் அல்லவோ! அதனை வெளிப்படுத்தும் பொருட்பெயரே 'சொல் விளம்பி' என்க!

கூட

'சொல்' என்பதற்குக் ‘கள்' என்பதும் ஒரு பொருள் தன் பிள்ளையை ‘ஊரார் மெச்சி விட்டால் கள் வெறி ஏறும்' என்பது நாமறியாத பாட்டா? குடிக்காமலே, 'சொல் வெறி'யில் எத்தனை பேர்கள், ஆடாத ஆட்டமெல்லாம்

6

கண்ணேரில் காண்கின்றோம் அல்லவோ!

ஆடக்