உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. சொற்பொருள் விளக்கம்

1. அட்டூழியம்

அட்டூழியம் என்பதற்குத் ‘தீம்பு' என்கிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி. மதுரைத் தமிழ்ச்சங்க அகராதியும் அதையே கூறுகிறது. கொடுந்தீம்பு என்கிறது செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகரமுதலி; “அவன் பண்ணிய அட்டூழியத் திற்கு அளவில்லை” என எடுத்துக் காட்டுத் தந்து, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இச்சொல்லாட்சி யுண்மையையும் சொல்கிறது.

அட்டூழியம் வந்த வகை என்ன? அட்டூழியத்திற்குத் தீம்பு என எப்படிப் பொருள் வந்தது? 'தீம்பு' என்பதற்குத் தீமை என்பதைக் காட்டி. ‘குறும்பு’, ‘கேடு' என்னும் பொருள்களைத் தருகிறது செ. ப. க. அகராதி.

அட்டூழியம் செய்பவன், தலைவனாக - பெரியவனாக- ஆணையிடத்தக்க தகுதியோ முறையோ உரிமையோ உடையவனாக இருக்க மாட்டான். அவன் செய்கின்ற வேண்டாத தலையீடுகள் முறைகேடுகள் குறுக்கீடுகள் ஆகியவையே ‘அட்டூழியம் எனப்படுகின்றதாம். இதனை எண்ணிப் பார்த்துக்கொண்டே சொல்லமைப்பை நோக்குதல் வேண்டும்.

அட்டு என்பது ஊழியம் என்பது ஆகிய இருசொல் இணைப்பே அட்டூழியம் என்பது வெளிப்படை. இதில் அட்டு என்பதன் பொருள் தெளிவாகி விட்டால் ஊழியத்தின் பொருள் தெளிவாகிவிடும்.

அடு' என்பதன் வழிவரும் சொல் அட்டு. அடுதல் என்பது சுடுதல் வாட்டுதல் வறுத்தல் பொரித்தல் சமைத்தல் கொல்லுதல் போரிடல் துன்புறுத்துதல் முதலிய பொருள்களைத் தரும். இங்கே அட்டூழியம் மனத்தைச் சுடுதல், வாட்டுதல், துன்புறுத்துதல் ஆகிய பொருள்களில் இடம்பெறுகிறது. மனவெதுப்பு, மனவுளைவு செய்வதே அட்டூழியமாம்; அதுவும் அதிகாரத்தோடு