உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம்

-

15

அதிகாரம் இல்லாத அதிகாரத்தோடு இருக்கும் என்பதையும் நினைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் ஏவியதைக் கேட்டு நடக்க வேண்டியவன், நம்மை வேண்டா வகையில் ஏவியும் மனவுளைச்சல் தந்தும் தன் தோற்றத்தை மிகுத்துக் கொள்ளும் போதே ‘உன் அட்டூழியத்தை நிறுத்து" என்றோ, “உன் அட்டூழியம் அளவுக்கு விஞ்சியது" என்றோ சொல்லும் வழக்கு நேர்கின்றது.

ஊழியம் செய்பவர்கள் தங்கள் ஊழியத்தை ஒழுங்காகச் செய்யாமல் அவ்வூழியத்தையும் அழித்து, பிறர் ஊழியத்தையும் கெடுத்து, ஊழியத்தை ஒழுங்குறுத்தும் அலுவலர்க்கும் வேண்டாக் குறுக்கீடும் தடையுமாய் நிற்கும் எதிரிடைச் செயல்களைச் செய்தல் அட்டூழியம் என்க.

அடும் பகை நிலையிலும் இல்லை; ஊழியம் பார்க்கும் நிலையிலும் இல்லை; இரண்டும் அல்லாமல் இரண்டும் இணைந்த எதிரிடை நிலை.

ள்ளத்திற்கு ஒட்டிய நிலையும் இல்லை; உள்ளத்திற்கு வெட்டிய நிலையும் இல்லை; இரண்டும் அல்லாமல் இரண்டும் இணைந்த எதிரிடை நிலை!

அழிப்பவனாக இருந்தால்

எச்சரிக்கையாக இருந் திருக்கலாம்; அணைப்பவனாக வந்து அழிப்பவனாக உள்ளம் கொண்டிருப்பவனால் அலைக் கழிவு இல்லாமல் தீருமா?

வாள்போல் பகைவர்; கேள்போல் பகைவர் என இரு வேறு வகையர் பகைவர். இவரோ ‘கேள்போல்’ பகைவர்!

காவலுக்கும் ஏற்படுத்தப்பட்டவரே களவாளியாக இருந்து சுரண்டினால் எஞ்சுமா? பயிரை ஆடுமாடு மேயாமல் காக்க அமைத்தது வேலி! அதுவே பயிரை மேய்ந்தால் பயிர் இருக்குமா? அழுகையை அமர்த்த அமர்த்தப்பட்டவளே உறங்கும் பிள்ளையைக் கிள்ளி விடுபவளாக இருந்தால் சொல்லறியாக் குழந்தை என்னாம்? அவளைக் கண்டாலே அழுமே! அவளைப் பார்த்தாலே ஒவ்வாமையாகிவிடுமே!

அட்டூழியம் - அழிவுவேலை; ஊழியம் செய்து காக்க வேண்டியவரே அழிக்கும் வேலை. அவ்வேலையை வைத்துக் கொள்ள வேண்டா என்பது போலச் சொல்லமைதி அமைந் துள்ளமை அறிந்துகொள்ளத் தக்கது.