உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அக்கறை

தமிழ் வளம் - சொல்

149

ஒன்றன்மேல் அளவிலா ஈடுபாடு காட்டுவதும், அதே நோக்காக இருந்து முயல்வதும் அக்கறைப் பொருள் என எவரும் அறிவர்.

‘அக்கரை’ என்பதை இக்கரை என்னும் அண்மைச் சுட்டுக்கு அப்பாலான சேய்மைச்சுட்டாம்; அந்தக் கரையை - அக்கரையைக் காட்டுவதாம் (Over Seas) என்பதை ‘அக்கரை’ என அருமையாக மாழியாக்கம் செய்வார் பாவாணர். 'அக்கரைச் சீமை’ என்பது 'கடல் கடந்த நாடு' என்பது எவரும் அறிந்தது.

அக்கறை என்பதை ‘அக்கரை’ என எழுதுவாரும் உளர். அதுபோல், அப்படி எழுதி இருவடிவும் காட்டும் அகராதியும் உண்டு! இலக்கியத்தில் கூட உண்டு. ஆனால், இவற்றைப் படியெடுத்தோரின் பிழையெனத் தள்ளிவிடலாம்; இரு வழக்காகவும் எழுதப்படுதல் கருதி இருவழக்கையும் அகராதியில் ஏற்றினார் என்றும் தள்ளிவிடலாம்.

அக்கறை என்பது இரட்டைச் சொல்லால் ஆய ஒற்றைச் சொல். ‘அறிவறை' (அறிவு அறை) என்றும் (சிலம்பு) குறையறை (குறை அறை) என்றும் (மலை) வழங்கப்படுதல் போல ‘அக்கு அறை' எனப் பிரிக்கப்படும் சொல் அக்கறை. இதனை அக்கு குறை எனப் பிரித்துக் காணல் பொருந்துவதன்று. அவ்வாறாயின் அக்குக் குறை' என்றே சொல்லாட்சி அமைய இடம் உண்டு. இல்லையாயினும், ‘அக்குறை’ என்றே திரியும். அதன் பொருள் அந்தக் குறை' எனப் பொருட் பிறழ்வுக்கு இடமாகிவிடும்.

அக்கு என்பது 'அஃகு' என்னும் பழவடிவினது. அஃகுதல் குறைதல், சுருங்குதல் எனப் பொருள் தருவது. “அஃகி அகன்ற அறிவு" (நுணுகி விரிந்த அறிவு) எனத் திருக்குறளில் ஆட் பெறும். ‘அஃகாமை' என அதன் எதிரிடையாய்ச் சுருங்காமையைக் காட்டியும் திருக்குறளில் ஆட்சிபெறும்.

அஃகு என்பதிலுள்ள ஆய்த எழுத்து, நுணுக்கம் என்னும் பொருள் தருவது மொழியியல் அறிந்தாரும் தொல்காப்பியம் கற்றாரும் தெளிவாக அறிந்த செய்தி, அச்சொல் அக்கு என்றாகியும் அப்பொருள் தரும்.

று

‘அஃகம்’ என்னும் தவசப் பெயர்ச் சொல், ‘அக்கம்’ என்று ஆகியும் அப்பொருள் தரும். ‘அஃகசாலை' என்பது நாணயம் அடிக்கும் சாலை. அது, ‘அக்கசாலை' என வழங்குதல் பெருவழக்கு.

6