உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம்

15

‘அக்க சாலை' என்பதோர் ஊர் கொற்கை- ஏரலை- அடுத்துள்ளது. அங்கே அக்கசாலை ஈசுவரர் கோயில் உள்ளது: அதிலே அவ்வாறு கல்லெழுத்தும் உள்ளது; திருநெல்வேலியில் அக்கசாலைத் தெரு உண்டு. அஃகம் அக்கமானதற்குச் சான்றாக அமைவன இவை.

'அறை' என்பதன் பொருள் அறுத்தல், அறுக்கப்படுதல் என்னும் பொருளது.வீட்டின் அறை, கண்ணறை, (குளத்துமடை) அறைக்கீரை, மூக்கறை; காதறை என்பவற்றில் உள்ள அறையின் பொருள் காண்க. 'அறை போகு குடிகள்' (ஊரைவிட்டு அற்றுப் போகும் குடிகள்) என்பது சிலம்பு.

'அறிவு அறை’ போதல், அறிவு அறிவு அற்றுப்போதல் குறையறை’ குறையற்றுப் போதல்' என்னும் பொருளன என்பதை எண்ணுக. ஆயின் அக்கறை என்பதன் பொருள் என்ன?

அக்கு என்பதற்குக் கண்ட பொருளையும், அறை என்பதற்குக் கண்ட பொருளையும் சேர்த்தால் 'அக்கறை’ப் பொருள் வந்துவிடும்)

‘சுருக்கம் அற்றுப் போதல்' அக்கறை என்க. ஒன்றன் மேல் பெருக்கமான ஈடுபாடு, பெருக்கமான ஆர்வம், பெருக்கமான உழைப்பு, பெருக்கமான உந்துதல் இருத்தல் தானே ‘அக்கறை! அப்பொருள் தானே இவ் விரட்டைச் சொல் இணைவாம். ‘ஒற்றைச் சொற்’ பொருள்.

3. "பகட்டு"

-

பலபேரிடையே ஒருவர் இருக்கிறார். அவர் நடை உடை, பேச்சு ஆகியவற்றில் பிறர்க்கு இல்லாத இயல்பொடு பொருந்தாத ஒரு போலித்தோற்றம் இருக்கக் காண்கிறோம். அந் நிலையில் அவரைப் பகட்டுபவராகச் சொல்கிறோம். அவர் செய்கை அல்லது தன்மை பகட்டெனக் கருதப்படுகின்றது.

இயல்பொடு பொருந்தியிருப்பதைப் பகட்டென்பது இல்லை. மிக அருமையான உடையெனின் ‘பளிச்சு' என்றிருக்கிறது என்பர்.பகட்டாக இருக்கிறது என்னும் வழக்கம் இல்லை. உயரிய அணிகலங்களை அணிதல் பகட்டெனச் சொல்லப்படுவது இல்லை. எடுப்பாக இருக்கிறது என்றே சொல்லப்படுகிறது. போலி அழகே பிறரினும் தனித்துத் தன்னைக் காட்டிக் கொள்ளச் செய்யும் செய்கையே பகட்டென விளங்குகின்றது.

-