உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

151

பகட்டுதலுக்கு ஆடம்பரங் காட்டுதல், போலிப் பிரகாசங் காட்டுதல், தற்புகழ்ச்சி செய்தல், மயக்குதல், வஞ்சித்தல். கவர்ச்சி ஆகிய பொருள்களை அகராதிகள் தருகின்றன. அனைத்தும் இயல்பல்லா வகை இயல்புகளாக இருத்தல் அறியத் தக்கது.

பிறரினின்று தன்னைத் தனியே எடுத்துக் காட்டுதற்காகத் தானே விரும்பிச் செய்வது ‘பகட்டு’ என்பதை அறியும் நாம் அப் பொருளையே அச்சொல் விளக்குதல் அறிந்து மகிழத்தக்கதாம்.

பக

-

-

பிளக்க; பகவு பிளவு; ப வு; பகை பிரிவு; பகல் - பகுக்கப்பட்டது என்பனபோல வரும் சொற்களில் உள்ள ‘பக’ பகட்டில் இருக்கக் காணலாம்.

‘எட்பகவு’ என்பார் திருவள்ளுவர். எள்ளின் பிளவு என்பது பொருள், எள்ளுக்காய் வெடித்தல் போல எனச் சரியான பங்கீட்டுக்குச் சொல்லப்படுதல் நடைமுறைச் செய்தி. எள் மிகச் சிறிது. எள்ளளவு என்பது சிற்றளவைக் குறி. அவ்வெள்ளும் இரு பிளவொன்றிய வித்தேயாம். அதனால் எட்பிளவு ‘எட்பகவு' எனப்பட்டதாம். 'பகச் சொல்லிக் கேளிர்ப்பிரிப்பர்' என்பதும் திருக்குறளே.

பக+அட்டு = பகட்டு. பிறரின் வேறுபடுத்திக் காட்ட - பிரித்துக் காட்ட அமைத்துக் கொள்வது ‘பகட்டு' என்க. அட்டுதல் - அமைத்தல்.

“எல்லாம் பகட்டுக் காண்'

என்னும் திருநெடுந் தாண்டகமும் (28:236) “படர்சடைகள் அவைகாட்டி வெருட்டிப் பகட்ட

என்னும் தேவாரமும் (676:2) இச்சொல்லாட்சி வழக்கைக் காட்டுவதுடன் பொருளாட்சியையும் காட்டும்.

பொதுமக்கள் வழக்கில் ஊன்றியுள்ள சொல் எனினும் அது புலமக்களால் போற்றப்பட்டமையும், அச்சொல் பொருள் பொருந்த அமைந்திருக்கும் சீர்மையும் எண்ணத் தக்கவையாம்.

‘பகடு' என்பதன் வழிவரும் 'பகட்டு' என்பது வேறு சொல்லாம். உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் உருபேற்கும் நிலையில் ‘பகட்டு' என வருதல் கருதுக. வயிறுவலி, வயிற்று வலியும், பயறுநெற்று பயற்று நெற்றும் ஆவது போல ஆங்குப் பகடு பகட்டு ஆயதென்க.