உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. தோசை

தோசை என்னும் சிற்றுண்டியைத் தமிழ்நாடு நன்கு அறியும். தோசையில் பல வகைகள் இன்று காண்கிறோம். விறலிவிடு தூது என்னும் நூலில் ‘தோசை வகைகள்' என்னும் தொடர் உள்ளது. ஆதலால் அது முன்னரே வகை வகையாய்ச் செய்யப் பட்டதை அறியலாம்.

து

காஞ்சிபுரம் தேவராசர் திருக்கோயில் கல்வெட்டு ஒன்றில், தோசை செய்து படைப்பதற்கு அறக்கட்டளை நிறுவிய செய்தி கூறப்பட்டுள்ளது. நான்கு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தாம் அக்கல்வெட்டு.

திருக்கோயிலின் படையற்பொருள் நாட்டுப்பொருளாகவும், பழமையாக வழங்கிவந்ததாகவும், புதிதாகப் புகுத்தப்படாததாகவும் இருத்தல் வேண்டும் என்பது தெளிவான செய்தி.

இனித் தோசை என்ற சொல் தமிழில் மட்டுமின்றித் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வழக்கில் உள்ளது. ஆதலால் தோசை என்ற சொல்லைத் தனித்தமிழ்ச் சொல் என்று கொள்வதில் ஐயமில்லை.

இக்கருத்துகளை, 1956இல் கோவைகிழார் இராமச் சந்திரனார் ஒரு கட்டுரையாக விரித்து எழுதினார். பிறர் அத்தோசைச் சொல்லுக்குப் பொருள் கூறுவதையும் அக் கட்டுரையிலேயே விளக்கினார்.

·

"தோ - ஓசை ஓசை - தோசை என்றும், தோ - சொய்- தோசை என்றும் கூறுவார்கள். தோ என்றது தூவி' என்ற வட மொழியின் திரிபு என்றும், அதற்கு இரண்டு என்ற பொருள் என்றும் கூறி, இருமுறை 'சொய்' என்ற ஓசை அது சுடும்போது உண்டாகிறபடியால் அப்பொருள் என்று பெயர் பெற்றது என்பர். துபாஷி - துவி - பாஷி - இரண்டு மொழிகள் பேசுபவன் என்பது இதைப் போன்ற ஒரு சொல்.