உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம்

15

தோசை வேற்றுச்சொல் என்பதைக் காட்டுபவர் கூறும் சொல்லாய்வுச் செய்தியைக் குறிப்பிடும் அவர், ‘இதைக் குறித்த கதை வருமாறு” என ஒருகதையையும் குறிப்பிடுகிறார்.

ஒருவன் கணியம் (சோதிடம்) கற்கப் புறப்பட்டானாம் அவனுக்குப் போகும். வழியில் சொகினத்தடை (சகுனத்தடை) உண்டாயிற்றாம். அவன் திரும்பி வந்து தன் மனைவியறியாமல் அட்டளையில் ஏறி மறைந்து கொண்டானாம் (அட்டளை என்பது அடுப்பறையில் விறகு வைப்பதற்காக அமைக்கப்பட் மேல் முகட்டுத் தடுப்பு ஆகும்). மனைவி, தோசை வார்க்கும் போது, அதன் ஒலிகளை எண்ணி 32 வர, அவள் அறியப் பின்னர் வெளிப்பட்டு இன்று 16 தோசை போட்டுள்ளாய் என்றானாம். அவனுடைய கணியத்திறம் கைம்மேல் பலிக்கக் கண்டு அவள் வியந்து போனாளாம். “இதன்படி தோசை என்றால் இரண்டு ஒலிகள் என்று பொருள்படும். ஆகவே இச்சொல் வடநாட்டுச் சொல் ஆகின்றது. அது சரியா?” என வினா எழுப்பினார்.

முடிவாக "இச்சொல் எவ்வாறு உண்டாயிற்று? வேறு லக்கியங்களில் வந்ததா? என்பவற்றைப் பற்றி நண்பர்கள் தெரிவிப்பார்களாக” என்றார்.

ச்செய்தியைத் தாங்கிய ‘தோசை’க் கட்டுரை செந் தமிழ்ச் செல்வி சிலம்பு 31. பரல் 4 பக்கம் 168 - 170 இல் வெளி வந்தது (1956 திசம்பர்)

இக்கட்டுரையைக் கண்ட பாவாணர், 'தோசை’க்கு விளக்கம் வரைந்தார்.

66

இட்டிலி போன்றே தோசையும் தமிழகத்தில் தொன்று தொட்டு வழங்கி வரும் சிற்றுண்டி வகையாகும். தோசை என்னுஞ்சொல் ‘தோய்' என்னும் பகுதியடியாகப் பிறந்ததாகும். உறைதல், திரைதல், புளித்தல், 'தோயும் வெண்டயிர்’

(கம்பரா. நாட்டுப். 28)

ட்டிலி மாவிலும் தோசைமா மிகப்புளித்திருத்தல் வேண்டும். இல்லாக்கால் சட்டியில் எழும்பாது, எளிதாய் வேகாது; சுவையாயுமிராது.

தோய் - தோயை - தோசை. ய-ச போலி.

இன்றும் நாட்டுப்புறத்தார் சிலர் தோயை என்றே

வழங்குவர்.