உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. நட்டணைக்கால்

அட்டணங்கால் அட்டணைக்கால் நட்ட

என்பவை பற்றி ஆய்வது இக்கட்டுரை.

மதுரைத் தமிழ்ச் சங்கச் சொல்லகராதி:

அட்டணங்கால் - அட்டணைக்கால்

நட்டணைக்கால்

அட்டணைக்கால் - ஒன்றின்மேல் ஒன்றாகக் குறுக்கே அணைத்து வைக்கப்பட்ட கால். (அடு:அணை; கால்.)

நட்டணை - 1 ஆகடியம், பரிகாசம். 2, வெறுப்பு (1, 2. வழக்) குறிப்பு : நட்டணைக்கால் பற்றிச் செய்தி இல்லை.

சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி:

அட்டணங்கால் attanai - kal, n See அட்டணைக்கால்.

- n

அட்டணைக்கால் attanai - K. Kal, N < அட்டம் +. - N N

1. Folded legs in sitting Gross legged குறுக்காக வைக்குங் கால்.

-

மடக்கி

2. one leg Placed Over the other in sitting Gross legged மேலிடுங்கால் Loe.

நட்டணம் நட்டணைகளுக்குக் கூத்து, கோமாளிக் கூத்து, கணவன் மனைவி போன்றவருள் ஒற்றுமையின்மை, நடிப்பு கொடுமை என்னும் பொருள்களும், நட்டணைக்காரன் என்பதற்குக் கருவங்கொண்டவன் என்னும் பொருளும் தரப்பட்டுள்ளன. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி:

அட்டணங்கால் அட்டணைக்கால் பார்க்க.

அட்டணை குறுக்கே (அட்டம் அணை) அட்டணைக்கால் உட்கார்கையில் கால்மேல் காலாகக் குறுக்காக மடக்கி வைக்கும் கால்.