உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

ருக்கைகளைக்

இளங்குமரனார் தமிழ்வளம்

15

நட்ட ணைக்கால் போட்டிருத்தல் என்பவை ஒன்றில் ஒன்று சிறிய சிறிய வேறுபாடுகளையுடையவை. இவை அவர்கள் வாழ்வில் வ தொன்று தொட்டவை. ஆங்கில மக்கள் முதலாம் அயலார் வரவும், அலுவலக அமைவும் ஏற்பட்ட பின்னர் வழங்கும் காண்டு, முந்தைப்பழக்கத்தையும் சொல்லாட்சியையும் ஆய்தல் தெளிவாகாது; முறையும் ஆகாது. நகரத்தார் ஊர்களில் எத்தகு பெருஞ் செல்வர் வளமனையிலும் திண்டும் அணையும் திகழ்வதே இன்றும் கண்கூடாதல் தெளிவு; வடநாட்டுச் சேட்டுகளின் வட்டிக் கடைக் காட்சியும் அத் தகைத்தாதல் அறிக.

சம்மணம், சப்பணம் சபைக்கு இருத்தல் என்பவை கால் மடக்கிக் கைகட்டி இருக்கும் கட்டுப்பாட்டு நிலை; கால் மடக்கி இருத்தல் அளவும் அத்தகைத்தே. காலை நிலத்தோடு நிலமாகப் படியவைத்து இருத்தல் என்பது அது. காலைத் தூக்குதல், குத்தவைத்தல், கால்மேல் கால்போடல் என்பவை இல்லாத அடக்க ஒடுக்க அமர்வே இவை ; சபை - அவை - ஊர்க்கூட்டம். ஊர்க்கூட்டத்தில் எப்படி ஊர்க்கு வணக்கமாக அடங்கி ஒடுங்கி உட்கார வேண்டுமோ அப்படி உட்கார்தல் சபைக்கு இருத்தல்.

உட்கு என்பது வலி; ஆர்தல் - அமைதல் ; களைப்பும் வலியும் போக வாய்ப்புப்போல் இருத்தல் உட்கார்தல்; சாய்ந் திருத்தல், கால்நீட்டி யிருத்தல் என்பன கால் நிலத்தில் படிந் திருக்க இருப்பு எழும்பியிருத்தலாம்; குத்துக்கால் போட்டிருத்தல் என்பது குத்தவைத்தல் போல் சுவர் தூண் முதலியவற்றில் சாய்ந்து இருத்தல் அட்டணைக்கால் போட்டிருத்தல் என்பது ஒரு கால் மடக்கி உட்கார்ந்து அக்காலின் மேல் ஒரு காலைக் குறுக்காக மடக்கிப் போட்டிருத்தல்; நட்டணைக்கால் குறுக்காக அக்காலின் மேல் ஊன்றியிருத்தல். சுவரில் சாய்ந்து கொண்டும் நட்டணைக் காலில் நிற்றல் உண்டு.

காக்கு ஒரு காலை ஊன்றி ஒரு காலை எடுத்து மடக்கி நிற்றலை ஓராற்றான் நட்டணைக் காலுக்கு ஒப்பிடலாம். எடுத்த காலை அடுத்த காலொடு பொருத்தி நில்லாமை ஒன்றே சொக்கின் ஒற்றைக்கால் நிலைக்கும் நட்டணைக் கால் நிலைக்கும் உள்ள வேறுபாடாம்.

'ஒற்றைக்காலில் நிற்றல்' என்பது கெடுபிடியாக நின்று, நினைத்ததை நிறை வேற்றிக் கொள்ளச் செய்யும் நட வடிக்கையாகக் கருதப்படும். "கொடுத்தே தீரவேண்டும் என்று